Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ஸ்டைல்தான் ஒரே வழி.. இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு பின் இருக்கும் சூப்பர் ரகசியம்!

Recommended Video

WORLD CUP 2019 | இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு பின் இருக்கும் ரகசியம்!- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பெரிய அளவில் சிஎஸ்கே அணியை போலவே விளையாடி வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. சிஎஸ்கே அணியின் ஸ்டைலை இந்திய அணி பல இடங்களில் பதிவு செய்து வருகிறது.

உலகம் முழுக்க சில கிளப் அணிகள், அந்நாட்டு தேசிய அணிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது வழக்கமாக நடக்கும். கால்பந்து போட்டிகளில் கூட இப்படி எல்லாம் அதிகம் நடந்து இருக்கிறது.

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த நேரத்தில் சிஎஸ்கே வீரர்கள்தான் இந்திய அணியில் அதிகமாக இருந்தார்கள். அதேபோல் கோலியும் தனக்கு வசதியான இளம் வீரர்களை அணியில் எடுத்து அஸ்வின் போன்ற சிஎஸ்கே வீரர்களை வீட்டிற்கு அனுப்பினார்.

எப்படி நடக்கிறது

எப்படி நடக்கிறது

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பெரிய அளவில் சிஎஸ்கேவை பின்தொடர்ந்து விளையாடி வருகிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், சிஎஸ்கே ஒவ்வொரு போட்டியிலும் எப்படி ஆட்டத்தை தனது கட்டுக்குள் கொண்டு வருமோ, எப்படி பேட்டிங் ஆர்டரை கையாளுமோ, எப்படி வெற்றிபெறுமோ அப்படித்தான் இப்போதும் நடந்து வருகிறது.

யார் பேட்டிங்

யார் பேட்டிங்

சிஎஸ்கே அணியில் யாருமே இல்லையென்றாலும் போட்டியை தனது பக்கம் திருப்புவதில் திறமையான அணி அது. சிஎஸ்கே அணியில் வயதான வீரர்கள் நிறைய பேர் இருந்த காரணத்தால், அடிக்கடி வீரர்கள் காயம் அடைவது வழக்கமாக இருந்தது. கடைசி ஐபிஎல் தொடரில் டு பிளசிஸ் காயத்துடன் இருந்தார். பின் இடையில் பிராவோ காயம் அடைந்தார். அதன்பின் இறுதியாக வாட்சனும் காயம் அடைந்து, அதே காயத்துடன் விளையாடினார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் எந்த வீரர்கள் காயம் அடைந்தாலும், வேறு ஒரு எதிர்பார்க்காத வீரர் உள்ளே வந்து அவரின் இடத்தை நிரப்புவார். அதுதான் தற்போது இந்திய அணியிலும் நடந்து வருகிறது. தவான் காயம் அடைந்தால், விஜய் சங்கர் அணிக்கு வருகிறார். புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷமி அணிக்கு வர இருக்கிறார். இப்படி நிறைய விஷயங்கள் சிஎஸ்கேவே போல நடக்கிறது.

பவுலிங் எப்படி

பவுலிங் எப்படி

அதேபோல் பவுலிங் தேர்வு முறையிலும் சிஎஸ்கேவை அதிகம் பின்பற்றுகிறது இந்திய அணி. 30-40 ஓவர்களில் இந்திய அணி எல்லா பவுலர்களையும் மாற்றி மாற்றி பந்து வீச வைக்கிறது. இது பெரும்பாலும் சென்னை அணியில் 10-15 ஓவர்களில் நடக்கும். கோலி இதற்கு முன் நடந்த தொடர்களில் இப்படி எல்லாம் செய்தது கிடையாது.

அதே மாதிரி

அதே மாதிரி

அதேபோல் பீல்டிங் நிறுத்துவதிலும் கோலி பெரிய அளவில் மெருகேறி இருக்கிறார். சிஎஸ்கே பவுலிங் மற்றும் பேட்டிங் பவர் பிளேயில் எப்படி வீரர்களை நிறுத்துமோ அப்படியே நிறுத்துகிறார் கோலி. தோனியின் ஆலோசனை இல்லாமலே கோலி இதை செய்யும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். இதை கடந்த போட்டியில் கமெண்ட்ரி செய்தவர்களே எடுத்துக் கூறினார்கள்.

செம பாஸ்

செம பாஸ்

அதேபோல் கோலி ரோஹித் இடையே தற்போது நல்ல கெமிஸ்டரி இருக்கிறது. இருவரும் களத்தில் அடிக்கடி ஆலோசனை செய்கிறார்கள். ரோஹித் தனது மும்பை இந்தியன்ஸ் அனுபவங்களையும் கோலியுடம் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இதுதான் சூப்பர்

இதுதான் சூப்பர்

இதனால் இந்திய அணியின் வெற்றி பார்முலாவிற்கு சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸும் முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறலாம். ஐபிஎல் அனுபவம் நிறைய தலைவர்களை உருவாக்கி இருக்கிறது என்பதே உண்மை . ஆனால் என்ன, கோலி ஆர்சிபி பார்முலாவை பயன்படுத்தாமல் இருந்தால் மட்டும் சரி.. கண்டிப்பாக ஈ சாலா கப் நமதேதான்!

Story first published: Wednesday, June 19, 2019, 11:49 [IST]
Other articles published on Jun 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+