Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ மிட்சல் ஸ்டார்க்னா.. நான் தோனி ஸ்டார்க்.. 14 பாலில் மரண பயத்தை காட்டிய தல.. வாயை பிளந்த கோலி!

Recommended Video

Worl Cup 2019 | 14 பாலில் மரண பயத்தை காட்டிய தல.. வாயை பிளந்த கோலி!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோனி கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக ஆடியது பலரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

உலகக் கோப்பை போட்டி பல ஆச்சர்யங்களை சுமந்து இருக்கிறது. வார்னர், தோனி, கெயில் போன்ற மூத்த வீரர்கள் இந்த தொடரில்தான் மிக சிறந்த பார்மில் இருக்கிறார்கள்.

இவர்கள் மூவருக்குமே இதுதான் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும். சரியாக தங்கள் கடைசி உலகக் கோப்பையில் இவர்கள் மூவரும் கலக்கி வருகிறார்கள். இன்று தோனி ஆடிய ஆட்டம் யாரும் கனவிலும் நினைக்காத ஆட்டம் ஆகும்.

லேட்டாக இறங்கினார்

லேட்டாக இறங்கினார்

முறைப்படி, நேற்று இந்திய அணி போட்டு இருந்த திட்டங்களின்படி இன்று தோனிதான் 4வது இடத்தில் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். அவர் அந்த இடத்தில் இறங்கியதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக மிக அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

30 நிமிடத்தில் பாண்டியா 3 சிக்ஸர் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார். வெறும் 27 பந்துகள்தான் அவர் பிடித்தார். அதில் அவர் 48 ரன்கள் எடுத்தார். இதனால் அணியின் ரன் ரேட் உயர்ந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அவர் அவுட்டான பின் தோனி இறங்கினார். தோனி டொக் வைத்து ரன் ரெட்டை குறைப்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் டோனி அப்படி ''நினைத்தவர்களை'' எல்லாம் ''காயப்போட்டார்''. ஆம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே அதிரடியை தொடங்கினார். பவுண்டரி, சிக்ஸர் என்று பறக்கவிட்டார்.

என்ன ஷாட்

இதுவரை அடிக்காத ஷாட்களை எல்லாம் மாற்றி மாற்றி அடித்து அசத்தினார். புல் ஷாட் தொடங்கி, லெக் சைடில் புது வகை ஹெலிகாப்டர் ஷாட்களை கூட அடித்தார். மொத்தம் 15 நிமிடம்தான் தோனி களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குள் எவ்வளவு ரன் சேர்க்க முடியுமோ அவ்வளவு ரன்களை சேர்க்க வேண்டும் என்று அடித்தார். இதை பார்த்து கோலியே வாயை பிளந்தார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

அதன்படி மொத்தம் 14 பந்துகளை தோனி எதிர்கொண்டார். இதில் 27 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மிட்சல் ஸ்டார்க் பந்தை அயர்ன் மேன் தோனி ஸ்டார்க் போல பறந்து பறந்து அடித்தார். கடைசி நேரத்தில் இவர் ஆடிய அதிரடியால் இந்தியா 350 ரன்னை கடக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 9, 2019, 19:27 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+