Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட.. தலைக்கு தில்ல பார்த்தீங்களா? ஐசிசிக்கு தோனி கொடுத்த ஒரே ஒரு பதிலடி.. செம வைரல்!

Recommended Video

ICC world cup 2019: Dhoni: தடையா எனக்கா?.. ஐசிசிக்கு தோனி கொடுத்த பதிலடி- வீடியோ

லண்டன்: ஐசிசியின் விதிமுறையை கிண்டல் செய்யும் விதமாக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி செய்த செயல் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. பலர் தோனியின் செயலை பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.

தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் படையில் லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். 2011 அவர் இந்த பொறுப்பில் சேர்ந்தார். பொறுப்பில் சேர்ந்ததோடு அவர் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் செய்த பயிற்சியின் காரணமாக அவருக்கு பாலிடான் பேட்ச் வழங்கப்பட்டது. இது பாராசூட் படையில் வழங்கப்படும் முக்கியமான பேட்ச் ஆகும்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக போட்டியில் இந்திய அணியின் கீப்பர் தோனி இந்த பேட்சை அணிந்து விளையாடினார். தோனி மிலிட்டரி உடை மாடலில் ஒரு கிளவுஸ் அணிந்து வருகிறார். இதில் பாலிடான் பேட்ச் முத்திரை இருந்தது. இது பெரிய சர்ச்சையானது.

ஏன் சர்ச்சை

ஏன் சர்ச்சை

அவர் அணிந்து இருந்த கிளவுஸ் இணையம் முழுக்க வைரலானது . இதன் வெளிப்பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் ஐசிசி விதிகளின் படி, ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது. இதனால் இதற்கு ஐசிசி எதிர்ப்பு தெரிவித்தது.

தடை போட்டது

தடை போட்டது

இதையடுத்து இந்த பேட்சிற்கு ஐசிசி தடையும் விதித்தது. இது தோனி ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் பிசிசிஐ தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. ஆனால் அதை ஐசிசி ஏற்றுக்கொள்ள மறுத்தது. தோனி கண்டிப்பாக அந்த கிளவுஸை அணிய கூடாது என்று ஐசிசி தெரிவித்தது.

அணியவில்லை

அணியவில்லை

இதையடுத்து கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோனி அந்த கிளவுஸை அணியவில்லை. ஐசிசி விதிகளை பின்பற்றி தோனி அந்த கிளவுஸை அணியாமல் வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் தோனியின் மொபைல் கவர் தற்போது திடீர் என்று வைரலாகி உள்ளது. அந்த கவரில் தோனி பாலிடான் பேட்சை வைத்து இருக்கிறார். அதேபோல் அவரின் டீ ஷர்ட் ஒன்றிலும் பாலிடான் பேட்ச் இருக்கிறது. இந்த இரண்டு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம தில்

வாவ் தல தோனிக்கு செம தில் தான் என்று எல்லோரும் டிவிட் செய்து வருகிறார்கள். ஐசிசி எதிர்ப்பை தோனி வித்தியாசமாக கிண்டல் செய்துள்ளார். தன்னுடைய ஸ்டைலில் தோனி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, June 11, 2019, 11:09 [IST]
Other articles published on Jun 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+