சூப்பர் ஓவரில் டை ஆன பின்பு இங்கிலாந்து வென்றது எப்படி? சர்ச்சைக்கு உள்ளான விதி.. இதுதான் காரணம்!
Recommended Video
லண்டன்: நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சூப்பர் ஓவரில் டை ஆன பின்பும் எப்படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கான விளக்கம் தற்போது அளிக்கப்பட்டது.
புதிய 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மகுடம் சூடி இருக்கிறது. மிகவும் பரபரப்பாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது.
இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் எளிதான இலக்கை நோக்கி இறங்கி 50 ஓவருக்கு 10 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி 241 ரன்கள் எடுத்து இருந்தது.

டை ஆனது
இதனால் போட்டி டை ஆனது. இதையடுத்து உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் முதல்முறையாக கடைசி ஓவரில் சூப்பர் ஓவர் போடப்பட்டது. மீண்டும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இறங்கினார்கள். அந்த ஓவரில் வரிசையாக 3 ரன், 1 ரன், பவுண்டரி, 2 ரன், 1 ரன், பவுண்டரி சென்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு இந்த முறை 15 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

என்ன நடந்தது
அதன்பின் நியூசிலாந்து களமிறங்கியது. இந்த நிலையில் நியூசிலாந்து மீண்டும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். 16 ரன்களை நியூசிலாந்து எடுக்க வேண்டும். குப்தில் மற்றும் நீசம் இருவரும் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள். அந்த ஓவரில் வரிசையாக 1 ரன், 2 ரன், சிக்ஸ், 2 ரன், 2 ரன், 2 ரன், 1 ரன் சென்றது. இதனால் நியூசிலாந்து அணி அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் டை ஆனது.

என்ன விதி
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சூப்பர் ஓவரில் டை ஆன பின்பும் எப்படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கான விளக்கம் தற்போது அளிக்கப்பட்டது. இப்படி சூப்பர் ஓவரும் டை ஆகும் சமயங்களில் இரண்டு அணிகளில் எந்த அணி அதிக பவுண்டரி அடித்துள்ளது என்று கணக்கு எடுக்கப்படும்.

யார் வெற்றி
இந்த நிலையில் நியூசிலாந்து மொத்தம் 50 ஓவரில் 14 பவுண்டரி அடித்துள்ளது. ஆனால் இங்கிலாந்து 50 ஓவரில் 22 பவுண்டரி அடித்துள்ளது. இதனால் பவுண்டரியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த விதிக்கு எதிராக கிரிக்கெட் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications