Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ஓவரில் இல்லை.. அதற்கு முன்பே கேம் மாறிவிட்டது.. போட்டியை மாற்றிய பரபர நிமிடங்கள் இதுதான்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

லண்டன்: நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டு முக்கியமான ஓவர்கள் காரணமாக இருந்தது. அந்த இரண்டு ஓவர்கள்தான் போட்டியை மொத்தமாக மாற்றியது என்று கூட கூறலாம்.

நேற்று உலகக் கோப்பையில் நடந்த இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி 50 ஓவர் போட்டிகளில் நடந்த மிக பரபரப்பான போட்டிகளில் ஒன்று என்று கூட கூறலாம். ஆம் ஆப்கானிஸ்தான் நேற்று நிகழ்த்திய மேஜிக்தான் இந்த பரபரப்பிற்கு காரணம்.

போட்டியில் எப்போது வேண்டுமானாலும் இந்தியா தோல்வி என்ற நிலைதான் இருந்தது. அதிலும் கடைசி ஐந்து ஓவரில் திடீர் திடீர்ன்னு உடையுதாம்... திடீர் திடீர்ன்னு சாயுதாம் என்று நிலையில்தான் மொத்த போட்டியும் சென்று கொண்டு இருந்தது.

எப்படி

எப்படி

இந்த போட்டியை மொத்தமாக இந்திய பக்கம் திருப்பிய பவுலர்கள் இருவர்தான். ஒருவர் பும்ரா. பும்ரா மட்டும் இல்லை என்றால் நேற்று போட்டி மொத்தமாக கைவிட்டு போய் இருக்கும். இன்னொருவர் லாஸ்ட் மினிட் ஹீரோ ஷமி. அவர் போட்ட அசாத்திய ஸ்பெல் காரணமாக கடைசியில் மொத்தமாக போட்டி கை மாறியது. இவர்கள் போட்ட 5 பந்துகள்தான் போட்டியை புரட்டிப்போட்டது.

அந்த ஓவர்

அந்த ஓவர்

நேற்று களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் எல்லோரும் இந்திய வீரர்களை விட நன்றாகவே ஆடினார்கள். தொடக்க வீரர்கள் நைப் மற்றும் சாசாய் நிதானமாக ஆடினார்கள். இவர்கள் 27 மற்றும் 10 ரன்கள் எடுத்தனர். அதற்கு பின் இறங்கிய ரஹ்மத்தும் சஹிதியும் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினார்கள். இவர்களின் விக்கெட்டை நேற்று இந்தியா எடுக்காமல் போய் இருந்தால் போட்டி ஆப்கானிஸ்தான் வசம் சென்று இருக்கும்.

பும்ரா

பும்ரா

அங்குதான் பும்ரா தன்னை உலகின் நம்பர் 1 பவுலர் என்று நிரூபித்தார். சரியாக 28வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் வீசப்பட்ட இரண்டு ஸ்பெல்கள் இந்த தொடரில் மிக அழகான ஸ்பெல்கள் என்று கூட கூறலாம். அந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து தூக்கினார் ரஹ்மத். அதற்கு முன்பு வரை ரஹ்மத் பும்ரா பந்தில் அதிரடியாகத்தான் ஆடினார். அந்த பந்தையும் அப்படித்தான் ஆட முயற்சித்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அந்த பந்து சரியாக பைன் லெக் திசையில் அந்த பந்து மேலே சென்றது. இதை பார்த்து புயலாக ஓடி வந்த சாஹல் விழுந்து புரண்டு சரியாக அந்த கேட்சை பிடித்தார். இந்த போட்டியில் பிடிக்கப்பட்ட முதல் கேட்ச் இது. இரண்டாவது கேட்ச் கொஞ்ச நேரத்தில் வந்தது. 36 ரன்களுக்கு ரஹ்மத் அவுட்டானார்.

இரண்டாவது விக்கெட்

இரண்டாவது விக்கெட்

அதே ஓவரில் கடைசி பந்தில் நிலையாக ஆடிக்கொண்டு இருந்த சஹிதி, பும்ரா போட்ட பவுன்சரில் நிலைகுலைந்து போனார். பந்து எப்படி வருகிறது என்று அவரால் கணிக்கவே முடியவில்லை. இத்தனைக்கும் பும்ரா போட்டது சாதாரண பவுன்சர்தான். ஆனால் சஹிதி அந்த பந்தை எப்படி ஆடுவது என்று தெரியாமல் பேட்டை தூக்கினார்.

அவுட்டானார்

அவுட்டானார்

சஹிதி யோசித்து பார்க்கும் முன் அது பேட்டில் பட்டு சரியாக பும்ராவின் கையிலேயே போய் விழுந்தது. பும்ரா பாய்ந்து போய் சூப்பர் மேன் கேட்ச் பிடித்து அந்த விக்கெட்டை எடுத்தார். இதுதான் நேற்று போட்டியில் பிடிக்கப்பட்ட இன்னொரு சிறப்பான கேட்ச் ஆகும்.

அடுத்து

அடுத்து

அடுத்த மாற்றம் கடைசி ஓவரில் நிகழ்ந்தது கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷமி ஓவர் போட வந்து இருந்தார். கடைசி ஓவரில் முதல் பந்தே அவர் பவுண்டரி கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அடுத்த பால் டாட் பால். அடுத்து ஷமி போட்ட 3 வது பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடிக்க பார்த்தார் நபி. பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார்.

இப்படித்தான் முடிந்தது

இப்படித்தான் முடிந்தது

அடுத்து ஷமி அப்தாப் ஆலமிற்கு பந்து போட்டார். 143 கிமீ வேகத்தில் வந்த இந்த யார்க்கர் பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மானுக்கு அதேபோல் லெக் ஸ்டம்பை பார்த்து யார்க்கர் போட்டார் ஷமி. அந்த விக்கெட்டும் காலி. கடைசி ஓவரில் ஹாட் டிரிக் விக்கெட் எடுத்து ஷமி போட்டியை முடித்தார். ஆனால் கடைசி ஓவரில் போட்டி முடிந்தாலும் அதற்கு விதை பும்ரா போட்ட 28வது ஓவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 23, 2019, 13:05 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+