Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரின் வாயை இப்படித்தான் அடைக்க வேண்டும்.. திட்டம் போட்டு திருப்பி கொடுத்த கோலி.. என்ன நடந்தது?

Recommended Video

World Cup 2019 : பேச முடியாமல் திக்கித் திணறிய மஞ்ச்ரேக்கர்.. முகத்தில் கரியை அள்ளி பூசிய ஜடேஜா!

லண்டன்: இந்திய அணிக்குள் ஜடேஜாவை எடுத்ததற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது. பலரும் நினைக்காத வேறு ஒரு காரணமும் இதற்கு பின் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

மும்பை சேர்ந்த சஞ்சய் மஞ்சிரேக்கர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக இருக்கிறார். இவர் எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டுவது வழக்கம்.

மும்பை சேர்ந்தவர் என்பதால் மற்ற மாநிலங்களில் சேர்ந்த வீரர்களை இவர் மோசமாக கமெண்ட் செய்வார். ஆரம்பத்தில் இருந்தே சஞ்சய் மஞ்சிரேக்கர் திமிருடன் பேசி பேசியே பிரபலமாகி இருக்கிறார்.

ஜடேஜா பற்றி என்ன சொன்னார்

ஜடேஜா பற்றி என்ன சொன்னார்

இந்த நிலையில் இவர் கடந்த இந்தியா வங்கதேசம் போட்டியின் போது இந்திய வீரர் ஜடேஜாவை மோசமாக விமர்சனம் செய்து இருந்தார். ஜடேஜாவை ''உதிரி விக்கெட்டுகள், ரன்களை எடுக்கும் வீரர்.. அவரை அணியில் எடுக்க கூடாது'' என்று கிண்டலாக அவமானப்படுத்தினார். போட்டி முழுக்க ஜடேஜாவை கிண்டலாக பல முறை விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்.

சண்டை நடந்தது

சண்டை நடந்தது

இதற்கு பதில் அளித்த ஜடேஜா நான் என் வாழ்க்கையில் உங்களை விட அதிக போட்டிகளை விளையாடி இருக்கிறேன் சார். இப்போதும் கூட விளையாடி வருகிறேன். சில விஷயங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாயில் இருந்து வயிற்றுப்போக்கு வருவது போல பேசுகிறீர்கள்.. போதும், என்று கோபமாக குறிப்பிட்டு இருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை வந்தது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் மஞ்சிரேக்கர் வாயை அடைக்கும் வகையில் கோலி தற்போது சரியாக ஜடேஜாவை அணியில் எடுத்துள்ளார். ஜடேஜாவை இன்று அணியில் எடுப்பார்கள் என்று கண்டிப்பாக மஞ்சிரேக்கர் நினைத்து பார்த்து இருக்க மாட்டார். இது கண்டிப்பாக மஞ்சிரேக்கருக்கு பெரிய அவமானமாக மாறி இருக்கும்.

கோலியை பற்றியும்

கோலியை பற்றியும்

மஞ்சிரேக்கர் கோலியை கூட விமர்சனம் செய்து உள்ளார். இவர் ரோஹித் சர்மாவிற்கு எப்போதும் ஆதரவாக பேசி கோலி, தோனியை மட்டம் தட்டுவார். முக்கியமாக தோனியை இவர் மோசமாக பேசி பல முறை சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார். கோலியை டெஸ்ட் போட்டி விளையாட தகுதியே இல்லாதவர் என்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் தற்போது திட்டம் போட்டு கோலி திருப்பி கொடுத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, July 6, 2019, 16:51 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+