Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. கோலியை திட்டம் போட்டு தூக்கிய ஆப்கான்.. போட்டியை மாற்றிய அந்த ஒரு பால்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | இந்தியா சொதப்பல், ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கு

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். ஆப்கான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறி வருகிறார்கள்.

உலகக் கோப்பை தொடரில் இன்று இன்னொரு அதிர்ச்சிகரமான நாள் என்றுதான் கூற வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி தனது சூழல் மூலம் இந்திய அணியை திணறடித்துக் கொண்டு இருக்கிறது.

வரிசையாக களமிறங்கும் இந்திய வீரர்கள் எல்லா சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பிக் கொண்டு இருக்கிறார். இந்திய அணி 220 ரன்களை தொடுவதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

வரிசையாக விக்கெட்

வரிசையாக விக்கெட்

இந்திய அணியில் வரிசையாக மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விஜய் சங்கர் என்று வரிசையாக வீரர்கள் எல்லோரும் அவுட்டானார்கள். ரோஹித் 1 ரன்னில் அவுட்டானார். முஜீப் உர் ரஹ்மான் போட்ட கேரம் பந்து சரியாக ஆப் ஸ்டம்ப் பக்கம் திரும்பியதில் ரோஹித் சர்மா அவுட்டானார்.

அடுத்தடுத்த அவுட்

அடுத்தடுத்த அவுட்

அதன்பின் கே எல் ராகுல் நபி போட்ட சூழலில் ஒரு மோசமான ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்து மோசமாக அவுட்டானார். இது தேவையே இல்லாதா அவுட் ஆகும். அதன்பின் விஜய் சங்கரும் லெக் ஸ்டம்பை நோக்கி வந்த ரஹ்மத் போட்ட பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 41 பந்தில் 29 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த நிலையில்தான் இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். அவர் நபி போட்ட எளிதான பந்தில் அவுட்டானார். கோலி பேட்டிங் சைட்டிற்கு வந்தவுடன், நபி சரியாக ஃபிளை திசையில் பீல்டரை நிற்க வைத்தார். அதுவரை அங்கே பீல்டர் நிற்கவில்லை.

அட

அட

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கோலி, பந்தை பவுண்டரி தட்ட நினைத்து அது ஸ்லிப் ஆகி சரியாக ரஹ்மத் கையில் போய் தஞ்சம் அடைந்தது . இதனால் நிலையாக ஆடிக்கொண்டு இருந்த கோலியும் அவுட்டானார். இந்த பந்து விக்கெட் விழக்கூடிய பந்து கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கோலி 63 பந்தில் 67 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 22, 2019, 17:29 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+