Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியால் இத்தனை மாற்றங்களா? பாகிஸ்தான் அளித்த அதிர்ச்சி.. புள்ளி பட்டியலில் புதிய திருப்பம்!

லண்டன்: நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. எந்த அணி எப்போது யாருக்கு அதிர்ச்சி தரும் என்று தெரியவில்லை.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்றாலும் ஆப்கானிஸ்தான் அணி மிகவும் அதிரடியாக ஆடி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் டஃப் ஃபைட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று

நேற்று

நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 227 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் மிகவும் நிதானமாக ஆடியது. மொத்தம் 49.4 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 230 ரன்கள் எடுத்தது.

செமி பைனல்

செமி பைனல்

இதன் மூலம் செமி பைனலுக்கான கனவை அந்த அணி தக்க வைத்துள்ளது. ஆம் தற்போது இருக்கும் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடம் வகிக்கிறது. 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா முதலிடம் வகிக்கிறது. 6 போட்டிகளில் 5ல் வென்று ஒன்று மழையால் தடைபட 11 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

சிக்கல் இல்லை

சிக்கல் இல்லை

அதன்பின் நியூசிலாந்து 8 போட்டிகளில் ஐந்து போட்டியில் வென்று இரண்டில் தோல்வி அடைந்து 3ம் இடம் வகிக்கிறது. இந்த மூன்று அணிகளும் கண்டிப்பாக செமி பைனலுக்கு சென்றுவிடும். ஆனால் நான்காவதாக செமி பைனலுக்கு செல்ல போகும் அணி எது என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது. இதில் தற்போது பாகிஸ்தான் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

நேற்று போட்டி

நேற்று போட்டி

நேற்று போட்டியில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது. இதனால் அந்த அணி 8 போட்டிகளில் 4ல் வேன்று 3ல் தோல்வி அடைந்து இருக்கிறது. இதனால் அந்த 9 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்து இருக்கிறது. ஆகவே இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வெற்றி காரணமாக முதல்முறை இங்கிலாந்து அணி 4வது இடத்திற்கு சென்றுள்ளது.

இங்கிலாந்து மோசம்

இங்கிலாந்து மோசம்

7 போட்டிகளில் 4ல் வென்று, 3ல் தோல்வி அடைந்து இங்கிலாந்து பரிதாபமாக தற்போது 5வது இடத்திற்கு சென்றுள்ளது. உலகக் கோப்பை நடத்தும் ஹோம் அணி இதனால் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதேபோல் வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளும் 6, 7 இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தொடர் வெற்றிகள் இப்படி வரிசையாக அணிகளை பின்னுக்கு தள்ளி, புள்ளி பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Sunday, June 30, 2019, 10:46 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+