Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 பேட்ஸ்மேன்.. 4 பவுலர்.. பாக். போட்ட மாஸ் கணக்கு.. இங்கிலாந்தை வீழ்த்தியது இப்படித்தான்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் போட்ட வித்தியாசமான பிளான் ஒன்று அந்த அணிக்கு உதவி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நேற்று முதல்நாள்தான் வங்கதேசம் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

நேற்று பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே மிகவும் வலுவாக காணப்பட்டது.

எப்படி

எப்படி

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல்ஹக் 44 ரன்கள் எடுத்தார். அதன்பின் பஹர் சாமான் 36, பாபர் அசாம் 63, முகமது ஹபீஸ் 84, சர்ப்ராஸ் அஹமது 55 ரன்கள் எடுத்தனர். களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அதிரடியாக ஆடினார்கள். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் இணையை முறிக்க இங்கிலாந்து பவுலர்கள் ரொம்ப சிரமப்பட்டார்கள்.

ஸ்கோர்

ஸ்கோர்

இந்த நிலையில் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி நன்றாகவே ஆடியது, அணியின் பார்ட்னர்ஷிப்பும் நன்றாகவே இருந்தது . ஜோஸ் பட்லர், ஜோ ரூட் இருவரும் அணியில் செஞ்சுரி அடித்தார்கள். இது இல்லாமல் ஜானி பிரைஸ்டோ 32 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி வெற்றிபெற்றுவிடும் என்றே எல்லோரும் கருதினார்கள்.

ஆனால் என்ன நடந்தது

ஆனால் என்ன நடந்தது

ஆனால் நடந்தது வேறு 300 ரன்களை அந்த அணி தாண்டினாலும், பாகிஸ்தானின் 348 ரன்கள் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 334 ரன்கள் எடுத்து 14 ரன்களில் அந்த அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதற்கு பின் பாகிஸ்தானின் சரியான திட்டமிடல் முக்கிய காரணமாக இருக்கிறது.

என்ன திட்டம்

என்ன திட்டம்

பாகிஸ்தான் தன்னுடைய 2017 சாம்பியன்ஸ் கோப்பை பார்முலாவைதான் இங்கே பயன்படுத்தி இருந்தது. அப்போதெல்லாம் 4 பவுலர்கள், 4 பேட்ஸ்மேன்கள்தான் அணியை வழி நடத்துவார்கள். மற்ற வீரர்கள் சொதப்பினாலும் எல்லா போட்டியிலும் இந்த 4*4 வீரர்கள் கண்டிப்பாக நன்றாக ஆடி விடுவார்கள். இதனால் அந்த அணி எளிதாக வெற்றிகளை குவித்து வந்தது.

மாறுவார்கள்

மாறுவார்கள்

அதன்படி ஒரு போட்டியில் 4 பவுலர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். 4 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள். அடுத்த போட்டியில் இந்த நிலை அப்படியே மாறும். வேறு 4 பேர் ஆட்டத்தில் கவனம் செலுத்துவார்கள். மற்ற வீரர்கள் எல்லோரும் அணியை சரியாமல் காத்துக் கொள்வார்கள்.

நேற்று இதுதான்

நேற்று இதுதான்

2017 சாம்பியன்ஸ் கோப்பை முழுக்க பாகிஸ்தான் இப்படித்தான் ஆடியது. நேற்று கூட, பாகிஸ்தானின் இமாம் உல்ஹக் 44 பாபர் அசாம் 63, முகமது ஹபீஸ் 84, சர்ப்ராஸ் அஹமது 55 ரன்கள் எடுத்தனர். அதேபோல் வஹாப் ரியாஸ் 3, ஷதாப் கான், முகமது அமீர் 3 விக்கெட் எடுத்தனர். ஒரே ஒரு ஓவர் போட்ட மாலிக் 1 விக்கெட் எடுத்தார் . இந்த 8 பேர்தான் நேற்று பாகிஸ்தான் அணியை காப்பாற்றியது. இதனால் பாகிஸ்தான் எளிதாக இங்கிலாந்தை வீழ்த்த முடிந்தது.

Story first published: Tuesday, June 4, 2019, 10:41 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+