30 நிமிடம்.. காபி குடிக்கும் நேரத்தில் கதையை முடித்த பாண்டியா.. 27 பாலில் ஆட்டத்தை மாற்றிய கதை!
Recommended Video
லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஹர்திக் பாண்டியா ஆடிய ருத்ர தாண்டவம் அந்நாட்டு வீரர்களை கதி கலங்க வைத்து இருக்கிறது. வந்து அரை மணி நேரத்தில் அவர் ஆட்டத்தையே மாற்றி இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யாரும் நினைக்காத அளவிற்கு பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா அதிரடியாக ஆடி 320 ரன்களை கடந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை இத்தனை ரன்கள் எடுக்க விடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதற்கு மிக முக்கிய காரணமாக பாண்டியா உருவெடுத்து இருக்கிறார்.

என்ன செய்தார்
யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று பாண்டியா 6 அல்லது 7 வது இடத்தில் களமிறங்குவதற்கு பதிலாக 4 வது இடத்தில் களமிறங்கினார். தோனி அல்லது கே எல் ராகுல் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பாண்டியா களமிறங்கினார். இதை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
ஆனால் அவர்கள் அதிர்ச்சி அடங்கும் முன்பே வேறு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆட தொடங்கினார் பாண்டியா. ஆம் அவரை இந்திய அணி களமிறக்கியதற்கு காரணமே அந்த அதிரடி தேவை என்பதால்தான். அந்த தேவையை உணர்ந்த பாண்டியா பவுண்டரி சிக்ஸர் என்று வரிசையாக பறக்கவிட்டார்.

ஸ்டார்க் ஓவர்
முக்கியமாக எல்லா நாட்டு வீரர்களும் பயந்து நடுங்கிய மிட்சல் ஸ்டார்க் பந்தில்தான் அதிரடியாக ஆடி பாண்டியா தெறிக்கவிட்டார். 37வது ஓவரில்தான் அவர் களம் இறங்கினார். அவர் பேட்டிங் செய்தது 45வது ஓவர்தான்.ஆனால் அதற்கு இடையில் அவர் ஆடிய 30 நிமிடங்கள் ருத்ர தாண்டவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏன் தெரியுமா
ஏன் என்றால் கோலிக்கு பார்ட் டைம் பவுலர்களை போடவிட்ட ஆஸ்திரேலியா கேப்டன், பாண்டியாவிற்கு பயந்து பார்ட் டைம் பவுலர்களை அனுப்பவில்லை. பாண்டியா களத்தில் ஆட தொடங்கிய பின் மிட்சல் ஸ்டார்க், கும்மின்ஸ் ஆகியோரை மட்டும்தான் அனுப்பினார். இதனால் கும்மின்ஸ் கோட்டா 45வது ஓவருக்கு முன்பாகவே முடிந்தது சோகக் கதை.

எப்படி அடித்தார்
தான் பேட்டிங் பிடித்த 30 நிமிடத்தில் பாண்டியா 3 சிக்ஸர் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார். வெறும் 27 பந்துகள்தான் அவர் பிடித்தார். அதில் அவர் 48 ரன்கள் எடுத்தார். இந்த அதிரடி காரணமாக அவர் அரை சதம் எடுப்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அப்போதும் கூட பொறுமையாக ஆடாமல் தூக்கி அடித்து அவுட்டானார். ஆனால் என்னவோ காபி குடிக்கும் கேப்பில் ஆஸ்திரேலியா கதையை முடித்து பிளானை நிறைவேற்றி பெவிலியன் திரும்பினார்.


Click it and Unblock the Notifications