கடைசி நேர டிவிஸ்ட்.. மழையே இல்லை.. ஆனால் போட்டி ரத்து.. இந்தியா- நியூஸி ஆட்டத்தில் நடந்தது என்ன?
Recommended Video
லண்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நேற்று எப்படி ரத்த செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள், முழு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத வேண்டிய போட்டி நேற்று நடக்க இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் மழை காரணமாக இந்த போட்டி தடை பட்டது. ஆனால் மழையே பெய்யாமல் எப்படி போட்டி தடைபட்டது என்று பலர் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எப்படி இருந்தது
முதலில் இந்த போட்டி நடக்க இருந்த டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம் இருக்கும் நாட்டிங்ஹாம் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்தது. நேற்றும் கூட 80% மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கணித்து இருந்தனர். இதனால் கண்டிப்பாக போட்டி நடக்காது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் இதில் நிறைய மாற்றம் நிகழ்ந்தது.

மாற்றம்
நேற்று மாலை இந்திய நேரப்படி 3 மணிக்கு 80% மழையே வாய்ப்பை குறைத்து 20% மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். இதனால் போட்டி தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. எப்படியும் போட்டி நடக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் போட்டி தொடங்க சரியாக சில நிமிடங்களுக்கு முன்புதான் மழை பெய்தது. ஆனால் மைதானம் ஏற்கனவே மூடப்பட்டு இருந்தது.

மாற்றம்
நேற்று மாலை இந்திய நேரப்படி 3 மணிக்கு 80% மழையே வாய்ப்பை குறைத்து 20% மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். இதனால் போட்டி தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. எப்படியும் போட்டி நடக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் போட்டி தொடங்க சரியாக சில நிமிடங்களுக்கு முன்புதான் மழை பெய்தது. ஆனால் மைதானம் ஏற்கனவே மூடப்பட்டு இருந்தது.

பெய்யவில்லை
அதன்பின் 10 நிமிடத்தில் மழை நின்றது. அதோடு, அந்த நாள் முழுக்க அதற்கு பின் மழை பெய்யவில்லை. இதனால் போட்டி கண்டிப்பாக நடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டிக்காக நியமிக்கப்பட்டு இருந்த நடுவர்கள் மாரிஸ் ஏராஸ்மஸ் மற்றும் பால் ரபேல் ஆகியோர்தான் களத்தை வந்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தனர்.

என்ன ஆராய்ச்சி
இங்கிலாந்து நேரப்படி முதல்கட்ட சோதனை பிட்சில் சரியாக 10 மணிக்கு செய்யப்பட்டது. அதன்பின் 6 முறை பிட்சை சோதனை செய்தனர். 3.30 மணி பிட்சை நடுவர்கள் சோதனை செய்தனர். பிட்ச் மூடப்பட்டு இருந்ததால் அது ஈரம் இல்லமால்தான் இருந்தது. ஆனால் மைதானம் ஈரமாக இருந்தது. இந்த டிவிட்ஸ்தான் நேற்று போட்டிக்கு தடையாக வந்தது.

எப்படி தடை
நேற்று மைதானம் பேட்டிங், பவுலிங் போட ஏற்றபடி இருந்தது. ஆனால் பீல்டிங் செய்ய சரியாக இல்லை. மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் நேற்று இரண்டு அணிகளின் பீல்டிங் கோச்சுகளை அழைத்து நடுவர்கள் ஆலோசனை செய்தார்கள். அவர்கள் இருவருமே இங்கு பீல்டிங் செய்வது கடினம் என்று கூறினார்கள். இதனால் போட்டியை கைவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதுதான் நேற்று கடைசி நேரத்தில் போட்டி ரத்தாக காரணம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications