அசத்தல் ஐடியா.. தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் பண்ட் தேர்வானது ஏன்?.. கோலியின் அசர வைக்கும் திட்டம்!
லண்டன்: இந்திய அணியில் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக புதிய வீரர் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டது ஏன் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டு இருக்கிறார். கடந்த மூன்று போட்டிகளில் இவர் இந்திய அணிக்காக விளையாடினார்.
இதனால் தற்போது இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட் அணிக்குள் வந்துள்ளார்.

ரிஷப் பண்ட் எப்படி
ரிஷப் பண்ட் பெரிய அளவில் ஒருநாள் போட்டியில் விளையாடியது இல்லை. இவர் 5 ஒருநாள், 1 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஆனாலும் தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் மீது கோலி பெரிய அளவில் நம்பிக்கை வைத்து இருப்பதாக தெரிகிறது.

டெஸ்ட் போட்டி
பண்ட் ஒருநாள் போட்டிகளில் சதம், அரை சதம் அடித்தது இல்லை. ஆனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவர் சதம் அடித்துள்ளார். அதேபோல் இவர் டி 20 போட்டிகளில் சிறப்பாக ஆட கூடியவர். இதனால் இவர் தேவைப்படும் சமயங்களில் அதிரடியாகவும், தேவைப்படும் நேரங்களில் டெஸ்ட் வீரர் போல நிதானமாகவும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைதானம்
இவர் டெஸ்ட் சதம் அடித்த ஒரு போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிரானது. இன்னொரு போட்டி இங்கிலாந்திற்கு எதிரானது. இதனால் இன்று இங்கிலாந்தில் நடக்கும் போட்டியில் பண்ட் கண்டிப்பாக நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இவரின் விளையாட்டை காண பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஏன் தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் அனுபவம் மிக்க வீரர் என்றாலும் அவரை நான்காவது வீரராக களமிறக்க எடுக்கவில்லை என்கிறார்கள். அவரை ஐந்தாவது இடத்தில் களமிறக்கவே எடுத்தனர். அதிலும் தோனிக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே தினேஷ் கார்த்திக் வருவார். அதனால்தான் தினேஷுக்கு பதில் டெல்லியில் இருந்த பண்டை இங்கிலாந்து வர வைத்து அணியில் எடுத்தனர் என்கிறார்கள்.

திட்டம் என்ன
பண்டை வைத்து இன்னொரு முக்கியமான திட்டம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அதன்படி பண்ட் சமயங்களில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்புள்ளது. கே எல் ராகுல் தொடக்க வீரராக தொடர்ந்து திணறினால் கண்டிப்பாக பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவார். இதுதான் இவரை வைத்து இந்தியா பெரிய திட்டம் போட்டு உள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications