Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உணவு.. உடை.. வீடு இல்லை.. ஆனால் பேட் இருந்தது.. 10 வருடமாக சிம்மாசனத்தில் இருக்கும் ஹசனின் வாவ் கதை

லண்டன்: உலகில் மிக சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் உருவாகி இருக்கிறார்.

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு மக்கள் கிரிக்கெட் மீது காதல் கொள்ள ஒரு வீரர் பிறப்பார். இந்திய அணிக்கு அப்படிப்பட்ட வீரர்தான் சச்சின் டெண்டுல்கர். சச்சின் விளையாடிய போது அவரை பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது என்ற நிலைதான் இருந்து வந்தது.

வங்கதேசம் அணிக்கு அப்படி ஒரு வீரராக உருவாகி இருப்பவர்தான் ஷாகிப் அல் ஹசன். ஆம், நேற்று அவர் ஆடிய ஆட்டத்தின் மூலம் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார். ஆனால் அவர் கடந்து வந்த பாதை என்பது யாரும் நினைத்து பார்க்க முடியாதது.

யார்

யார்

வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தா அருகே இருக்கும் வங்கதேசத்தின் சிறிய கிராமமான மவுரா என்ற இடத்தில் பிறந்தார். அவர் பிறந்த நேரம்தான் குடும்பம் ஆக வறுமையில் இருந்தது. தினப்படி சாப்பாட்டிற்கே அவரின் குடும்பம் கஷ்டப்பட்டு வந்தது. கொல்கத்தாவில் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து வேலை பார்த்து கடன்களை அடைத்து வந்தனர்.

கிரிக்கெட் ஆசை

கிரிக்கெட் ஆசை

ஆனால் ஹசனுக்கு இந்த வறுமை எல்லாம் பெரிய விஷயமாக இருக்கவில்லை. ஆம், ஹசன் வறுமைக்கும் இடையில் கிரிக்கெட் மீது காதல் கொண்டார்.12 வயது இருக்கும் போதே ஊர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியவர், பள்ளி கிரிக்கெட் அணியிலும் பின் சேர்ந்தார். பள்ளியில் அதிரடியாக வேகப்பந்து வீசி வந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கிலும் மெருகேறினார்.

எப்படி வாய்ப்பு

எப்படி வாய்ப்பு

பள்ளி அணியில் விளையாடும் போது இவர் போட்ட ஓவர் ஒன்று அங்கு வந்திருந்த வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு பிடித்து போனது. இதனால் அவர் அந்நாட்டின் மிக பிரபலமான இஸ்லாபுர் பாரா கிளப் அணியில் இணைய வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்புதான் அவரின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. இங்குதான் அவர் தனது பவுலிங் வித்தையை கற்றுக்கொண்டார். அதேபோல் பேட்டிங் செய்யவும் சரியாக கற்றுக்கொண்டார்.

செம பாஸ்

செம பாஸ்

அவரின் குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் இருந்து மீண்டு வர தொடங்கியது. 17 வயதில் இவர் கிளப் அணியில் ஆடியதை பார்த்த வங்கதேச அணி நிர்வாகிகள், நேரடியாக இவரை தேசிய அணியில் சேர்ப்பதற்கான பயிற்சியில் களமிறங்கினார்கள். 2004ல் பயிற்சியை தொடங்கிய இவர் 2006ல் வங்கதேசம் அணியின் அண்டர் 19 அணியில் சேர்ந்தார்.

சூப்பர்

சூப்பர்

அந்த தொடரில் அவர் 85 பந்தில் செஞ்சுரி அடித்து அசத்தினார். அவரின் திறமையை பார்த்த நிர்வாகிள் 2006ல் தேசிய அணியில் நிரந்தமாக எடுத்தனர். முதலில் பேட்டிங் மட்டும் செய்து வந்த அவர் முழு ஆல்ரவுண்டராக மாறினார். இவரை பார்த்த மற்ற நாட்டு அணிகள் கவுண்டி கிரிக்கெட், ஐபிஎல், பிபிஎல் உள்ளிட்ட பெரிய தொடர்களில் இவரை எடுத்தது.

பொன்னான காலம்

பொன்னான காலம்

இதுவரை 201 ஒருநாள், 55 டெஸ்ட், 73 டி 20 போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். 2006-2008தான் இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான வருடங்கள். அதன்பின் அவர் தற்போது தனது வாழ்நாள் பார்மில் இருக்கிறார். இவர் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இருக்கிறார். கடந்த 10 வருடமாக நம்பர் 1 ஆல் ரவுண்டர் என்ற சிம்மாசனத்தில் மாறி மாறி இவர் அமர்ந்து வருகிறார்.

நேற்று போட்டி

நேற்று போட்டி

அதேபோல் நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் இவர் அதிரடியாக ஆடினார்.நேற்று நடந்த போட்டியில் ஹசன் வெறும் 99 பந்துகளில் ஹசன் 124 ரன்கள் எடுத்தார். இதுதான் அந்த அணியின் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாகிப் அல் ஹசன்தான் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இவரின் ஆட்டத்தை பார்த்து உலக நாடுகள் எல்லாம் வியந்து போய் இருக்கிறது. எனக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கை கொடுத்தது. எதுவும் இல்லாமல் இருந்தேன். இப்போது எல்லாம் மாறிவிட்டது. என் மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் வங்கதேச ரசிகர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று இந்த உலகக் கோப்பை ஹீரோ தெரிவித்து இருக்கிறார்.

Story first published: Tuesday, June 18, 2019, 11:19 [IST]
Other articles published on Jun 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+