Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு இப்போதும் மதிப்பில்லை.. ஆனாலும் அவர் விக்கெட் எடுப்பார்.. இந்திய அணியை காத்த ரட்சகன்!

லண்டன்: நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பியது. இதனால் ஆட்டத்தின் மொத்த பொறுப்பும் இந்தியா பவுலர்கள் கையில் வந்தது.

மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இவ்வளவு எளிதான இலக்கை மேற்கு இந்திய தீவுகள் எடுத்துவிடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. மேற்கு இந்திய தீவுகளின் திட்டத்திற்கு இந்திய பவுலர்கள் கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. களமிறங்கிய இந்திய பவுலர்கள் எல்லாம் நானும் ஒரு விக்கெட் எடுப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பவுலிங் போட்டனர்.

ஷமி

ஷமி

ஆனால் அனைவரையும் விட நேற்று சிறப்பாக பந்து வீசியது யார் என்றால் அது கண்டிப்பாக ஷமிதான். ஷமி போட்ட 4வது ஓவரின் 5வது பந்தில்தான் போட்டி மாறியது. கெயிலுக்கு ஒரே ஒரு வீக்னஸ் இருக்கிறது. சரியான லெந்தில் சரியாக பவுன்சர் போட்டால் அவுட்டாகி விடுவார். இதை சரியாக கணித்து அவருக்கு அதே மாதிரியான பந்துகளை வீசி வந்தார் ஷமி. ஐபிஎல் அனுபவம் கைகொடுத்தது. சரியான லெந்தில் சரியான வேகத்தில் அவர் போட்ட பந்தை, நிலைதடுமாறி சுற்றிய கெயில் சரியாக கேதார் ஜாதாவிடம் கேட்ச் கொடுத்தார்.

ஆட்டம் கண்டது

ஆட்டம் கண்டது

அங்குதான் மேற்கு இந்திய தீவுகளின் அஸ்திவாரம் ஆட்டம் காண தொடங்கியது. ஆம் ஆனால் ஷமி அதோடு விடவில்லை. அடுத்த விக்கெட் 6வது ஓவரின் 5வது பந்தில் ஷமி மூலம் மீண்டும் எடுக்கப்பட்டது. மிக சரியாக பவுண்டரி அடித்த ஹோப்பை, சரியான வேகத்தில் யார்க்கர் பந்து போட்டு கவிழ்த்தார் ஷமி. ஹோப் இந்த போட்டியில் அதிரடியாக ஆடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

இல்லை

இல்லை

அவரும் காலியானதால், மேற்கு இந்திய தீவுகளின் ஓப்பனிங் வரிசையாக சரிய தொடங்கியது. அதன்பின் மேற்கு இந்திய தீவுகளில் வலிமையான வீரராக ஷிம்ரான் ஹெட்மயர் மட்டுமே இருந்தார். ஆனால் அவரையும் ஷமி மீண்டும் 28வது வந்து அவுட் செய்தார். இதனால் மேற்கு இந்திய தீவுகள் மொத்தமாக நம்பிக்கையை இழந்தது. இவர் ஏதாவது பார்ட்னர்ஷிப் கிடைக்காதா என்று காத்திருந்தார்.

கடைசி விக்கெட்

கடைசி விக்கெட்

அதேபோல் மேற்கு இந்திய தீவுகளின் கடைசி விக்கெட்டையும் ஷமிதான் எடுத்தார். ஓஷன் தாமஸ் விக்கெட்டை எடுக்க எல்லோரும் திணறிக் கொண்டு இருந்த போது, சரியாக வந்த ஷமி பவுன்சர் போட்டு அந்த விக்கெட்டையும் எடுத்தார். இதனால் மொத்தமாக மேற்கு இந்திய தீவுகளின் கதை முடிந்தது.

நான்கு விக்கெட்

நான்கு விக்கெட்

நேற்று போட்டியில் ஷமி மொத்தம் 4 விக்கெட் எடுத்தார். வெறும் 16 ரன்கள் மட்டுமே இவர் விட்டுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இவர் 4 விக்கெட் எடுத்தார். இந்திய அணியில் இவர் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாகத்தான் களமிறங்கினார். இப்போதும் கூட ஷமிக்கு அணியில் நிரந்தர இடம் எல்லாம் கிடையாது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

அணியில் இவருக்கு பெரிய தனிப்பட்ட மரியாதையும் கிடையாது. இப்போதும் ஷமி அணிக்குள் மாற்று வீரராகத்தான் களமிறங்கி வருகிறார். இந்த வருடம் முழுக்க சிறப்பாக பந்து வீசியும் இவருக்கு இந்திய அணியில் குறைவாகவே வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 28, 2019, 10:41 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+