Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீண்ட நேர அட்வைஸ்.. கோலி கொடுத்த ஐடியா.. ஜடேஜா பிடித்த கேட்ச்.. முதல் சம்பவம் இப்படித்தான் நடந்தது!

லண்டன்: இங்கிலாந்து அணியின் வலுவான பார்ட்னர்ஷிப்பை உடைக்க இந்திய கேப்டன் கோலியின் முக்கியமான ஐடியா ஒன்றுதான் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. புதிய ஜெர்சி போட்ட நேரம் வரிசையாக இந்திய அணி போடும் பந்துகளை எல்லாம் இங்கிலாந்து வீரர்கள் பறக்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி வருகிறது.

செம அதிரடி

செம அதிரடி

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பிரைஸ்டோ இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடி வருகிறார்கள். முக்கியமாக பிரைஸ்டோ சிக்ஸ், பவுண்டரி என்று கொஞ்சம் கூட இந்திய பவுலர்களுக்கு இறக்கம் காட்டாமல் ஆடி வருகிறார். இப்போதே அவர் 97 ரன்கள் எடுத்துவிட்டார். அதுவும் வெறும் 86 பந்தில்.

பவுலர்கள்

பவுலர்கள்

அதேபோல் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயும் 2 சிக்ஸ், 7 பவுண்டரி என்று தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். முக்கியமாக குல்தீப் ஓவரில் வரிசையாக பவுண்டரி பறக்க விட்டார். பாண்டியா, ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் என்று அனைத்து பவுலர்களையும் இருவரும் துவைத்து எடுத்தனர்.

அந்த ஓவர்

அந்த ஓவர்

அப்போதுதான் 22வது ஓவரை மீண்டும் குல்தீப் யாதவ் போட வந்தார். அப்போது சரியாக கோலி அவரிடம் சென்று அறிவுரை வழங்கினார். நீண்ட நேரம் கோலி அவரிடம் பேசினார். குல்தீப்பும் கோலியிடம் மீண்டும் ஏதோ பேசினார். ஜேசன் ராய் 66 ரன்களுடன் பேட்டிங் செய்து வந்தார். இதனால் அந்த ஓவரின் முதல் பால் எப்படி இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

விக்கெட் விழுந்தது

விக்கெட் விழுந்தது

அந்த பந்தில் கோலி சொன்னபடியே சரியாக கூக்லி போட்டார். அப்போது லாங் ஆனில் நின்ற ஜடேஜா வேகமாக ஓடி வந்து, பறந்து, விழுந்து கேட்ச் பிடித்து துள்ளினார். மிக அசாத்தியமான கேட்சை, மிக எளிதாக பிடித்து ஜடேஜா கெத்து காட்டினார். எல்லோரும் எதிர்பார்த்த இணை அப்போதுதான் முறிந்தது. கோலி சரியான நேரத்தில் கொடுத்த ஐடியா இந்திய அணிக்கு மிக சரியாக உதவியது. ஜேசன் ராய் 66 ரன்களுடன் வெளியேறினார்.

Story first published: Sunday, June 30, 2019, 17:17 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+