Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரின் ஆதிக்கம் தாங்கவில்லை.. நீக்குங்கள்.. பாக். கோச்சிற்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி.. பரபரப்பு!

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருக்கும் சில முக்கிய வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளருக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார்கள். இது கிரிக்கெட் உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தொடர் ஆகும். 2007 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோசமாக விளையாடியது. அதன்பின் இந்தியா சுதாரித்துக் கொண்டது. ஆனால் இன்னும் பாகிஸ்தான் சுதாரிக்கவில்லை.

இந்த 2019 உலகக் கோப்பை தொடர் முழுக்கவே பாகிஸ்தான் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறது. இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

என்ன இடம்

என்ன இடம்

பாகிஸ்தான் அணி விளையாட வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைபட்டது. இதனால் பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மேலே 9வது இடத்தில் இருக்கிறது. இது தற்போது பாகிஸ்தான் ரசிகர்களை பெரும் கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருக்கும் சில முக்கிய வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளருக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் கோச் மைக்கி ஆர்த்தரை உடனே நீக்க வேண்டும் சிலர் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் யார் இந்த கோரிக்கையை வைத்தது யார் என்ற விவரம் வெளியாகவில்லை.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

தற்போது பாகிஸ்தான் அணியில் வீரர்கள் மற்றும் கோச் மைக்கி ஆர்த்தர் இடையில் கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. கோச் மைக்கி ஆர்த்தரிடம் சில வீரர்கள் பேசுவது கூட இல்லை. அவர் சொல்வது எதையும் கேட்பதில்லை என்று தகவல்கள் வருகிறது. இன்னும் சிலர் வீரர்கள் கோச் மைக்கி ஆர்த்தர் மிக மோசமாக வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.

புகார் அளித்தனர்

புகார் அளித்தனர்

இதனால்தான் தற்போது வீரர்கள், பாகிஸ்தான் கோச் மைக்கி ஆர்த்தருக்கு எதிராக புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விக்கு இந்த பிரச்சனையும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். வீரர்கள் மற்றும் கோச் மைக்கி ஆர்த்தர் இடையே பெரிய பிரச்சனை உள்ளது. அது இப்போது சரியாகாது என்றும் அணிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

எப்படிப்பட்டவர்

எப்படிப்பட்டவர்

கோச் மைக்கி ஆர்த்தர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட்டர். உலகின் சிறந்த கோச்களில் இவரும் ஒருவர். இந்திய அணிக்கு உலகக் கோப்பை வாங்க உதவிய கோச் கேரி கிரிஸ்டனின் நெருங்கிய நண்பர் இவர். அதேபோல் இவர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கும் கோச்சாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 20, 2019, 12:20 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+