Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோற்றாலும் ஹீரோதான்.. கோலியை பிடிக்கும்.. இந்தியா சிறந்த அணி.. ஆப்கான் கேப்டன் சொல்வதை பாருங்க!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நைப் உருக்கமான பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.

நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்த பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த போட்டி கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்றது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. 213 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நைப் அளித்த பேட்டியில், நாங்கள் வருத்தமாக இருக்கிறோம். எங்களால் உலகின் சிறந்த அணியை வீழ்த்த முடியவில்லை. நலன் வாய்ப்பு கிடைத்தது. உலகக் கோப்பை தொடரில் அப்படி நடந்து இருந்தால் அது பெரிய சாதனையாக இருந்திருக்கும். ஆனால் இந்திய எங்களுக்கு சிறிய வாய்ப்பை கூட கொடுக்காமல் கவனமா ஆடியது.

வெற்றி முக்கியம்

வெற்றி முக்கியம்

வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோம். இந்தியா சிறந்த அணி என்பதை நிரூபித்துவிட்டார். எங்கள் அணி வீரர்கள் நன்றாகவே ஆடினார்கள். நபி எங்கள் அணியில் சிறப்பாக ஆடினார். ஆப்கானிஸ்தான் அணியில் மட்டுமல்ல உலகில் இருக்கும் சிறந்த வீரர்களில் தற்போது அவரும் ஒருவர்.

கடைசி மாற்றம்

கடைசி மாற்றம்

நாங்கள் கடைசி ஐந்து ஓவர் வரை போட்டியை கொண்டு போகலாம் என்று நினைத்தோம். கடைசியில் வெற்றிபெற திட்டமிட்டோம். நபி திட்டமிட்டபடியே விளையாடினார். ஆனால் சில நல்ல வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டுவிட்டோம். அதுதான் தோல்விக்கு காரணம்.

இந்தியா பிடிக்கும்

இந்தியா பிடிக்கும்

இந்தியா எங்களுக்கு மிகவும் பிடித்த அணி. எனக்கு எப்போதுமே இந்திய அணியை பிடிக்கும். நாங்கள் அவர்கள் போட்டியை பார்க்கும் போது, அவர்களுக்குத்தான் எங்கள் சப்போர்ட். எனக்கு மிகவும் பிடித்த வீரர் விராட் கோலிதான். அவர்களுக்கு எதிராக விளையாடியதே எங்களுக்கு பெரிய பெருமைதான், என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் நைப் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, June 23, 2019, 17:49 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+