அதை மறைத்துவிட்டேன்.. அணியில் கூட யாருக்கும் தெரியாது.. கோலி சொன்ன அதிர வைக்கும் உண்மை!
லண்டன்: உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி வீரர்களிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைத்துவிட்டதாக இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்து இருக்கிறார்.
உலகக் தொடரில் தொடக்கத்தில் இருந்து தோல்வியே காணாமல் விளையாடி வரும் அணி என்றால் அது இந்தியாதான். மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா இந்த தொடரில் உருவெடுத்து உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் இன்று நேருக்கு நேர் மோத இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்தார்

என்ன பேட்டி
கேப்டன் கோலி அளித்த பேட்டியில் இந்த உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளில் எல்லோரும் அதிக அழுத்தம் இருக்கிறது. முக்கியமாக போட்டிகளில் செல்ல செல்ல செமி பைனல் நெருங்க நெருங்க அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனக்கும் அதிக அழுத்தம் இருக்கிறது. நான் பொய் சொல்ல விரும்பவில்லை.

என்ன அழுத்தம்
நான் அழுத்தம் இல்லாமல் இருக்கிறேன் என்று கூறினால் அது பொய். எனக்கு நிறையவே அழுத்தம் உள்ளது. ஆனால் அதை நான் நன்றாக கையாள்கிறேன். எனக்கு இருக்கும் அழுத்தத்தை மறைக்க எனக்கு தெரியும். நான் அதை மறைப்பதில் திறமை வாய்ந்தவன்.

என்ன சிக்கல்
ஒருவேளை எனக்கு அழுத்தம் இல்லாமல் போனால்தான் சிக்கல். எனக்கு அழுத்தம் இல்லாமல் போனால்தான் சரியாக விளையாடாமல் போவேன். இந்த அழுத்தம்தான் என்ன இயங்க வைக்கிறது. அதுதான் எல்லோரையும் நன்றாக விளையாட வைக்கும்.

என்ன ஆர்வம்
ஒவ்வொரு போட்டிக்கும் முன் நான் ரொம்ப ஆர்வமாக இருப்பேன். அழுத்தமும் இருக்கும். ஆனால் அது என் அணியினருக்கு கூட தெரியாது. அவர்களிடம் இதை மறுத்துவிட்டேன். இதுதான் எங்களை வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்கிறது. இதுவே எங்களை கடைசியில் வெற்றியை நோக்கி நகர்த்துகிறது என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications