என்ன இப்படி அடிச்சிக்கிறாங்க.. ஐசிசியை கோபம் அடைய வைத்த சண்டை.. ஷாக்கிங் வீடியோ வெளியானது!
லண்டன்: நேற்று மைதானத்தில் மாறி மாறி தாக்கிக் கொண்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.
நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 227 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் மிகவும் நிதானமாக ஆடியது. மொத்தம் 49.4 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 230 ரன்கள் எடுத்தது.

என்ன சண்டை
இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சண்டை போட்டனர். இது தொடர்பான செய்திகள் இன்று கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த சண்டை தொடர்பாக புதிய கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

மிக மோசம்
இதில் சில ரசிகர்கள் மோசமாக மைதானத்திற்கு உள்ளேயே. வீரர்கள் விளையாடும் போதே மாறி மாறி தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பெண் ரசிகைகளும் சண்டையில் ஈடுப்பட்டுள்ளனர். ஆம், இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. மைதானத்தில் ஸ்பிரேயை வைத்து மாறி மாறி ரசிகர்கள் தாக்கிக் கொண்டனர். இதில் சில பெண் ரசிகைகளுக்கும் மோசமாக காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன வீடியோ
இந்த நிலையில் இந்த சண்டை குறித்து தற்போது வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவரும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரும் மாறி மாறி இதில் அடித்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொள்கிறார்கள். இந்த வீடியோவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சண்டை தனக்கு அதிர்ச்சி அளித்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கேப்டன்கள் தெரிவித்துள்ளனர்.

கோபம்
இந்த வீடியோக்கள் வைரலானதன் காரணமாக அந்த ரசிகர்கள் மீது தற்போது ஐசிசி நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது. இவர்களுக்கு எதிரான இங்கிலாந்து போலீசில் புகார் அளித்து ஐசிசி முடிவெடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் ரசிகர்கள் இப்படி சண்டை போட கூடாது என்பதற்காக இப்போதே போலீசில் புகார் அளிக்க ஐசிசி முடிவெடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications