Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையில் ஒலித்த தமிழ்.. இந்திக்கு நோ.. மூத்த மொழிக்கு பெருமை சேர்த்த ஐசிசி.. என்ன நடந்தது?

Recommended Video

World Cup 2019 finals nz vs eng | மூத்த மொழிக்கு பெருமை சேர்த்த ஐசிசி! என்ன நடந்தது?

லண்டன்: தமிழ் மொழியை கவுரவிக்கும் வகையில் ஐசிசி வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

உலகம் முழுக்க தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

ஐபிஎல் வருகைக்கு பின் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுக்க வைரலானார்கள். சிஎஸ்கே வீரர்களை தமிழர்கள் கொண்டாடும் விதம் பல நாட்டு வீரர்களை பொறாமை கொள்ள வைத்துள்ளது.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் தமிழக ரசிகர்களை பாராட்டியது, தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தமிழில் டிவிட் செய்தது, பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் சிங் பாதி தமிழராக மாறியது என்று தமிழ் மொழிக்கும் கிரிக்கெட்டுக்கு சமீப காலமாக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அதேபோல் தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி, வங்கதேசம் ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்களும் கிரிக்கெட்டை விரும்பி பார்த்து வருகிறார்கள். தமிழ் ரசிகர்களால் ஐசிசி, பிசிசிஐ இரண்டு அமைப்பிற்கு பெரிய அளவில் வருமானம் வருகிறது.

என்ன பாராட்டு

என்ன பாராட்டு

இந்த நிலையில் தமிழ் மொழியை கவுரவிக்கும் வகையில் ஐசிசி வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேசும் வீடியோ ஆகும் இது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து அவர் இதில் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.

என்ன வைரல்

இதற்கு தமிழில் சப்டைட்டில் கொடுத்து ஐசிசி பேஸ்புக் பக்கம் வீடியோ வெளியிட்டு இருக்கிறது. உலகில் சில மொழிகளுக்கு மட்டுமே ஐசிசி இப்படி வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் தமிழும் ஒரு மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

செம

செம

ஐசிசி இப்படி தமிழில், அதுவும் இந்தியா விளையாடாத ஒரு போட்டிக்கு தமிழில் சப்டைட்டில் கொடுத்து இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பல தமிழர்கள் ஐசிசிக்கு இதனால் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Sunday, July 14, 2019, 17:55 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+