Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் நடந்த 3 ஆச்சர்ய சம்பவங்கள்.. வீடியோ வெளியிட்டு புகழ்ந்த ஐசிசி.. ஏன்?

லண்டன்: நேற்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியில் நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதில் மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

நேற்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இறங்கிய இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுத்து 14 ரன்களில் அந்த அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

சூப்பர்

சூப்பர்

இந்த போட்டியில் நேற்று நிறைய வித்தியாசமான ஷாட்கள் அடிக்கப்பட்டது. நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடந்தது. மிக முக்கியமாக பாகிஸ்தான் வீரர்கள் நிறைய வித்தியாசமான ஷாட்களை முயற்சி செய்து பார்த்தனர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் நேற்று ஜாலியாக என்ஜாய் செய்து விளையாடினார்கள் என்றுதான் கூற வேண்டும்.

 முதல் விஷயம்

முதல் விஷயம்

நேற்று நடந்த போட்டியில் முகமது ஹபீஸ் மிகவும் அதிரடியாக ஆடினார். 62 பந்துகளில் அவர் 84 ரன்கள் எடுத்தார். நேற்று அவர் இரண்டு முறை விக்கெட் ஆகும் நிலைக்கு சென்று எஸ்கேப் ஆனார். ஆனால் என்ன நடந்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து அவர் வித்தியாசமான ஷாட்களை முயற்சி செய்து வந்தார். அப்படித்தான் 30.2 வது ஓவரில் அடில் ரஷீத் பந்தில் ஹபீஸ் சிக்ஸ் ஒன்று அடித்தார்.

செம

செம

அதற்கு முதல் பந்தில்தான் ஹபீஸ் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து, அது கேட்ச் வாய்ப்பாக அமைந்தது. ஆனால் அந்த எளிமையான கேட்சை இங்கிலாந்து வீரர் மிஸ் செய்தார். இதற்கு அடுத்த பந்தே, லாங் ஆன் திசையில் ஹபீஸ் சூப்பர் சிக்ஸ் ஒன்று அடித்தார்.

அடுத்து என்ன

அதேபோல் நேற்று பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மிகவும் அதிரடியாக ஆடி வந்தார். அப்போது மெயின் அலி பந்தில் அவர் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். அவர் 63 ரன்கள் அப்போது எடுத்து இருந்தார். சரியாக அந்த பந்தில், அவர் சிக்ஸ் அடிக்க முயன்ற போது, அதை கிறிஸ் வோக்ஸ் பிடித்தார். டைவ் அடித்து, தாவி, உருண்டு சாகசம் செய்து கிறிஸ் வோக்ஸ் அந்த கேட்சை பிடித்தார்.

 இன்னொரு பேட்டிங்

இன்னொரு பேட்டிங்

அதேபோல் 25.5 ஓவரில் வஹாப் ரியாஸ் பந்தில் ஜோஸ் பட்லர் பவுண்டரி ஒன்று அடித்தார். அவர், முகமது ஹபீஸ் விளையாடியதை போலவே, ஸ்கூப் ஷாட் விளையாடினார். ஆனால் இந்த ஷாட் மிக மிக வித்தியாசமாக இருந்தது. நேற்று நடந்த போட்டியில் நிறைய வீரர்கள் ஸ்கூப் ஷாட் முயற்சி செய்தார்கள். அதில் இதுதான் சிறந்த ஷாட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று சம்பவமும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

Story first published: Tuesday, June 4, 2019, 13:05 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+