Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி மீது உங்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி.. வீடியோ போட்டு அவமானப்படுத்திய ஐசிசி.. கொந்தளிப்பு!

Recommended Video

தோனியை வீடியோ போட்டு அவமானப்படுத்திய ஐசிசி.. கொந்தளிப்பு!

லண்டன்: இந்திய அணியின் மூத்த வீரர் தோனி அவுட்டானதை கிண்டல் செய்து ஐசிசி வெளியிட்டு இருக்கும் வீடியோ பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று உலகக் கோப்பை செமி பைனல் போட்டி நடைபெற்றது. எப்படியாவது பைனலுக்கு செல்ல வேண்டும் என்ற தீவிரத்துடன் இந்திய அணி விளையாடியது.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி நழுவ விட்டுள்ளது.

தோனி

தோனி

இந்த போட்டியில் தோனி, ஜடேஜா இருவரும் ஆடும் வரை போட்டி இந்தியாவின் கைக்குள் இருந்தது. இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதனால் கடைசி நேரத்தில் இந்திய அணியை தோனி வெற்றிபெற வைப்பார் என்று எல்லோரும் நம்பிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனி ரன் அவுட் ஆன பின் இந்தியாவின் தோல்வி உறுதியானது. தோனி தேவையில்லாமல் 48வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தோனி அவுட்டானார்.

என்ன வீடியோ

இந்த விக்கெட்டை நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் எடுத்தார். இந்த நிலையில் இந்த வீடியோவை எடிட் செய்து தற்போது ஐசிசி கிண்டல் செய்துள்ளது. நியூசிலாந்து வீரர்கள் சூப்பர் பவருடன் களமிறங்கி பைனலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக திறமையுடன் செயல்பட்டது போல ஐசிசி அந்த வீடியோவை உருவாக்கி உள்ளது.

என்ன கிண்டல்

என்ன கிண்டல்

தோனியை கிண்டல் செய்யும் விதமாக இந்த வீடியோ இருக்கிறது. முக்கியமாக நியூசிலாந்து வீரர்களுக்கு சூப்பர் பவர் இருப்பது போல காட்டி இருப்பதும் இந்திய ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது . இதற்கு எதிராக ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகிறார்கள்.

ஏன் இப்படி

ஐசிசிக்கு தோனி அவுட்டானதில் என்ன ஒரு சந்தோசம். அதிலும் இந்தியா செமி பைனல் விட்டு வெளியேறியதில் எவ்வளவு சந்தோசம். ஏன் ஐசிசி நடுநிலையாக இல்லாமல் இப்படி காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறது. எப்படி ஒரு மூத்த வீரரை ஐசிசி அவமானப்படுத்தலாம் என்று ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள்.

கடும் கோபம்

இன்னும் சிலர் தோனி விளையாடும் போது போடப்பட்ட பால் நோ பால் ஆகும். கடைசி பவர் பிளேயில் வெளி வட்டத்தில் மைதானத்தில் 5 பேர் மட்டுமே நிற்க வேண்டும். அதற்கு மேல் வீரர்கள் நின்றால் அது நோ பால் என்று கருதப்படும். தோனி அவுட்டான 48.3 பந்தில் நியூசிலாந்து அணியின் 6 வீரர்கள் வெளிவட்டத்தில் இருந்தனர். இதை கேள்வி கேட்காமல் ஏன் ஐசிசி மொக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறது என்று பலர் கேட்டு இருக்கிறார்கள்.

Story first published: Thursday, July 11, 2019, 17:03 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+