தமிழில் திட்டினேன்.. ரோஷம் வந்து வரிசையாக விக்கெட் எடுத்தார்.. ஷமி குறித்து வெளியான சுவாரசியம்!
Recommended Video
லண்டன்: இந்திய வீரர் முகமது ஷமி எப்போது தமிழில் திட்டினாலும் உடனே ரோஷம் வந்து சரியாக பந்து வீசி விக்கெட் எடுப்பார் என்று தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுவாரசிய சம்பவம் ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி தற்போது இவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் ஆடி வருகிறார். கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வரிசையாக எடுத்து ஹாட் டிரிக் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக களமிறங்கிய இவர் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இவர் குறித்து தற்போது இந்திய வீரர் அஸ்வின் பேட்டி அளித்துள்ளார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் ஷமிக்கும் தமிழுக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. அது இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி. மொஹாலியில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது எங்களை விட 60 ரன்கள் அதிகம் எடுத்து இருந்தது. கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஹமீத் பார்ட்னர்ஷிப் போட்டு இருந்தனர்.

கோபம்
அவர்களின் விக்கெட்டை எடுக்க எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. அவர்கள் நிலையாக ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது ஷமிதான் ஓவர் போட்டது. நாங்கள் எல்லாம் எப்போது விக்கெட் விழும் என்று காத்திருந்தோம். ஆனால் ஷமி அப்போதுதான் மோசமான பந்து ஒன்றை, கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் போட்டார். நான் அவரிடம் போய் கோபமாக தமிழில் பேசினேன்.

விளக்கம் அளித்தேன்
அவரிடம், நான் மட்டும் உன்னை மாதிரி ஸ்பீட் பவுலராக இருந்தால் இப்படி பந்து வீசி இருக்க மாட்டேன். உன்னை போல பொறுப்பில்லாமல் வீசி இருக்க மாட்டேன் என்று கூறினேன். அவர் என்னிடம், என்னை என்ன சொன்ன சொல்லு, தமிழில் என்ன சொன்ன என்று கேட்டார். நான் அப்போது அவரிடம் விளக்கம் கொடுத்தேன். அதன்பின் போட்ட பவுலிங்கில் வரிசையாக அவர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். ஒரு பந்தில் கோபமாக பவுன்சர் போட்டு விக்கெட் எடுத்தார்.

இப்படித்தான்
இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்பை அவர் காலி செய்தார். அதன்பின் அவர் எப்போது விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் நான் அவரை தமிழில் திட்டுவேன். உடனே ஷமி விக்கெட் எடுப்பார். இது பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது, ஐபிஎல் போட்டியிலும் பலமுறை நடந்து இருக்கிறது. அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்பது வேறு விஷயம் என்று அஸ்வின் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications