Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை செய்யலாமா? வேண்டாமா? போட்டிக்கு முன் கடும் குழப்பம்.. இந்திய அணியில் என்ன நடக்கிறது?

Recommended Video

World Cup 2019 : போட்டிக்கு முன் கடும் குழப்பம்.. இந்திய அணியில் என்ன நடக்கிறது?

லண்டன்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் இன்று என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் மோதிக்கொள்கிறது.

இன்று நடக்கும் போட்டியில் தோல்வி அடைந்தால் மேற்கு இந்திய தீவுகள் கண்டிப்பாக செமி பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்துவிடும். அதே சமயம் இந்தியா தோல்வி அடைந்தால் பெரிய பாதிப்பு இருக்காது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

இந்திய அணியில் பல வருடங்களாக பிரச்சனையாக இருக்கும் இடம் என்றால் அது மிடில் ஆர்டர்தான். ஆம் இந்திய அணியில் மிடில் ஆர்டர் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 2012ல் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது. அப்போதில் இருந்து இப்போது வரை இந்திய அணிக்கு நிலையான ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய முடியவில்லை.

இப்போது யார் இருக்கிறார்

இப்போது யார் இருக்கிறார்

உலகக் கோப்பை போட்டி தொடங்கிய போது கே எல் ராகுல் 4 வது வீரராக இந்திய அணியில் களமிறங்குவார் என்று உறுதியானது. ஆனால் கடைசி நேரத்தில் தவான் காயம் காரணமாக ஆஸ்திரேலிய போட்டிக்கு பின் விலக நேரிட்டது. இதனால் கே எல் ராகுல் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார். இதனால் சரி செய்யப்பட்ட மிடில் ஆர்டர் பிரச்சனை மீண்டும் தலை தூக்கியது.

இரண்டு பேர்

இரண்டு பேர்

இந்த நிலையில் தற்போது இந்த இடத்தில் ஆடுவதற்காக மூன்று வீரர்களுக்கு இடையில் போட்டி இருக்கிறது. 4 வது இடத்தில் களமிறங்கி ஆடி வரும் விஜய் சங்கர் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. இரண்டு போட்டிகளில் அவர் மோசமாக விளையாடி சொதப்பி இருக்கிறார். இதனால் அவரை மூன்றாவது போட்டியில் களமிறக்குவது சரியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இன்னும்

இன்னும்

அதேபோல் மீதம் இருக்கும் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவருக்கு இடையிலும் கூட போட்டி நிலவி வருகிறது. தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆட கூடியவர். அதே சமயம் பொறுப்பானவர். ஆனால் பண்ட் எந்த கவலையும் இன்றி அதிரடியாக ஆடும் வீரர். இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்வதே சரியாக இருக்கும். அதுவே இந்திய அணிக்கு வலிமை சேர்க்கும் என்கிறார்கள்.

ஆனால் யார்

ஆனால் யார்

ஆனால் இவர்கள் இருவரில் யாரை அணிக்குள் எடுப்பது என்ற குழப்பம் நிலவி வருகிறது. யாருக்கு வாய்ப்பு அளித்தால் சரியாக இருக்கும். அனுபவம் உள்ள வீரரா, இளம் வீரரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, June 27, 2019, 9:24 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+