கோலி செய்த 2 தவறு.. சர்ச்சைக்கு உள்ளாகும் விஷயம்.. அங்குதான் இந்திய அணியின் சறுக்கல் தொடங்கியது!
Recommended Video
லண்டன்: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் கோலி செய்த தவறு இந்திய அணிக்கு பின்னடைவாக முடிந்து இருக்கிறது.
இந்தியா தற்போது செமி பைனல் போட்டிக்காக தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக நடக்கும் கடைசி லீக் மேட்சை ஒரு வார்ம் அப் மேட்ச் போல இந்தியா விளையாடிக் கொண்டு இருக்கிறது.
தற்போது இந்தியா இலங்கை இடையே லீக் போட்டி நடந்து வருகிறது. தொடக்கத்தில் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா போக போக பிடியை நழுவவிட்டுள்ளது.

டாஸ்
இதில் இலங்கை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்தது. ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் மோசமாக திணறி வந்தனர். இலங்கை 11 ஓவருக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் இந்தியா அதிகம் செலுத்தி வந்தது.

ஆனால் என்ன
ஆனால் இந்திய அணி போக போக இந்த மாயாஜாலத்தை தொடரவில்லை. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூசும் , திரிமன்னேவும் தொடர்ந்து நிலைத்து நின்று நிதானமாக ஆடினார்கள். இதனால் இந்திய அணி பவுலர்கள் அவர்களின் ஜோடியை எப்படி பிரிப்பது என்று தெரியாமல் திணறினார்கள். இதில் திரிமன்னே 55 ரன்கள் எடுத்தார்.

மேத்யூஸ்
எந்த போட்டியிலும் ஆடாத ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த போட்டியில் மட்டும் சதம் அடித்தார். இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியில் சாஹல் இடம்பெறாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. சாஹல் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தால் கண்டிப்பாக கூடுதலாக ஒரு விக்கெட்டை எடுத்து இருப்பார்.

தவறு
அதேபோல் இன்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் ஷமிக்கு பதில் ஏன் புவனேஷ்வர்குமாரு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எல்லா போட்டிகளையும் இக்கட்டான நிலையில் மாற்றியது ஷமிதான். ஆனால் அவருக்கு இந்த போட்டியில் கோலி வாய்ப்பு வழங்காததே இந்திய அணியின் பவுலிங் கடைசி நேரத்தில் சொதப்ப காரணம் என்றும் கூறுகிறார்கள். கோலி ஏன் தொடர்ந்து ஷமியை புறக்கணித்து வருகிறார் என்று அடிக்கடி கேள்விகள் எழுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications