Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி சிறுகசிறுக சேர்த்த அத்தனை சாதனையும் முறியடிப்பு.. ஒரே போட்டியில் இந்தியா செய்த மாஸ் சம்பவம்!

லண்டன்: நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் நிறைய சாதனைகளை முறியடித்து இருக்கிறது.

நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 69, வார்னர் 56, கேரி 55 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடியும் போது அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

என்ன சாதனை

என்ன சாதனை

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் ஒரு சில அணிகள் மட்டுமே 300 ரன்களுக்கு அதிகமாக எடுத்து இருக்கிறது. பொதுவாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 300 ரன்களுக்கு அதிகமாக எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால் இந்திய அணி நேற்று 350 ரன்களை கடந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலகக் கோப்பை போட்டி ஒன்றில் 350 ரன்களை கடந்த ஒரே அணியாக இந்தியா தற்போது மாறியுள்ளது.

சூப்பர்

சூப்பர்

அதேபோல் நேற்று இந்திய அணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி கிடையாது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 50வது முறையாக நேற்று வெற்றியை பதிவு செய்தது. 40வது முறையாக இந்தியா வென்ற போது ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். நேற்று தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

செம

செம

ஆஸ்திரேலியா அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் வரிசையாக 10 போட்டிகளில் வென்றுள்ளது. நேற்று 11வது போட்டியில் வென்று புதிய சாதனை படைக்க திட்டமிட்டது. ஆனால் இந்தியா அதற்கு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செம பாஸ்

செம பாஸ்

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் 20 வருட சாதனையை இந்தியா முறியடித்து உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை ஒன்றில் சேஸ் செய்யும் போது 1999ல்தான் தோல்வி அடைந்தது. 1993 மே 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக 10 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா சேஸ் செய்யும் போது தோல்வி அடைந்தது. அதன்பின் வரிசையாக 19 போட்டிகளில் உலகக் கோப்பையில் சேஸ் செய்யும் போது ஆஸ்திரேலியா வென்றது. அந்த 20 வருட சாதனையை இந்தியா முறியடித்து இருக்கிறது.

இன்னொரு சாதனை

இன்னொரு சாதனை

அதேபோல் கடந்த உலகக் கோப்பை தொடரில் இருந்தே வரிசையாக 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் சென்ற உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிய போட்டியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரிசையாக 8 உலகக் கோப்பை போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தியா எப்போதும் இப்படித்தான்

இந்தியா எப்போதும் இப்படித்தான்

பொதுவாக இந்தியாதான் ஆஸ்திரேலியாவின் நிறைய ரெக்கார்டுகளை முறியடித்து இருக்கிறது என்று கூட கூறலாம். ஆஸ்திரேலியாவின் 16 டெஸ்ட் போட்டி வெற்றியை 2001ல் முறியடித்தது. அதேபோல் 16 டெஸ்ட் போட்டி வெற்றியை 2008ல் மீண்டும் முறியடித்தது. அதன்பின் தற்போது ஒரே போட்டியில் நிறைய சாதனைகளை முறியடித்து இருக்கிறது.

Story first published: Monday, June 10, 2019, 11:17 [IST]
Other articles published on Jun 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+