Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் கை கூடி வந்துள்ளது.. இந்தியா பைனலுக்கு செல்வது உறுதி.. சூப்பர் வாய்ப்பு.. எப்படின்னு பாருங்க

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ | இந்தியா இறுதி போட்டிக்கு செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு- வீடியோ

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளது. இந்தியா கண்டிப்பாக இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்றுவிடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை செமி பைனல் போட்டி நேற்று நடந்தது. ஆனால் போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்டது.

இந்த மழை காரணமாக போட்டி பாதியில் தடைபட்டது. இதனால் நேற்று மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோர் என்ன

ஸ்கோர் என்ன

நேற்று நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை. முக்கியமாக பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பவுலிங்கை சுத்தமாக நியூசிலாந்து வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. 46.1 ஓவர்கள் பிடித்த அந்த அணி 5 விக்கெட்டை இழந்து வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இன்று மீண்டும்

இன்று மீண்டும்

இந்த நிலையில் நேற்று மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மீண்டும் போட்டி நடக்கும் . நியூசிலாந்து அணி விட்ட இடத்தில் இருந்து பேட்டிங்கை துவங்கும். 46.2 பந்தில் இருந்து இந்தியா மீண்டும் பந்து வீசும். இன்று மாலை 3 மணிக்கு போட்டி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

நேற்று போல இல்லாமல் இன்று மான்செஸ்டரில் கொஞ்சம் நல்ல வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை அங்கு கொஞ்சம் வெயில் அடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று போட்டி துவங்கும் முன் பெரும்பாலும் மைதானம் காய்ந்து இருக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது இந்திய அணிக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்.

நல்லது

நல்லது

இன்று காலை பிட்ச் எவ்வளவு காய்ந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு பேட்டிங் செய்ய வசதியாக இருக்கும். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது போல மிகவும் தைரியமாக அதிரடியாக ஆட முடியும். சேஸிங் செய்வது போல கஷ்டப்பட வேண்டியது இல்லை. ஆனால் பிட்ச் காரணமாக நியூசிலாந்து அணிக்கு இன்று பவுலிங் போட சிரமமாக இருக்கும்.

எல்லோரும் தயார்

எல்லோரும் தயார்

அதேபோல் இந்திய அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பவுலிங் குறித்து எந்த திட்டமும் இல்லாமல், பேட்டிங் செய்யும் மனநிலையோடு களமிறங்கினாலே போதும். ஆனால் நியூசிலாந்து அணியில் இருக்கும் 5 பவுலர்கள்தான் அந்த அணியை காப்பாற்ற வேண்டும். இது இந்திய அணிக்கு அதிக இலக்கை அடிக்க சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

மழை வந்தாலும்

மழை வந்தாலும்

அப்படியே ஒருவேளை இன்று மழை வந்து ஒரு ஓவர் கூட போட முடியவில்லை என்றாலும் கூட, புள்ளி பட்டியலில் இந்திய அணிதான் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் புள்ளிகள் அடிப்படையில் இந்தியாதான் வெற்றிபெறும். ஆகவே இந்தியா இந்த உலகக் கோப்பையில் பைனல் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, July 10, 2019, 10:56 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+