Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு தவறுதான்.. இல்லையென்றால் வேற லெவல்.. இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த சின்ன மிஸ்டேக்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு சின்ன தவறு செய்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணியாக இரண்டு அணிகள் வலம் வருகிறது. இந்த இரண்டு அணிகளையும் எப்படி வீழ்த்துவது என்று தெரியாமல் பெரிய பெரிய அணிகள் குழம்பிப் போய் இருக்கிறது.

அந்த இரண்டு அணிகளில் ஒன்று நியூசிலாந்து இன்னொரு அணி இந்தியா. இந்த இரண்டு அணிகளும் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோத வேண்டிய ஆட்டமும் மழையால் தடைப்பட்டது.

என்ன ஆட்டம்

என்ன ஆட்டம்

இந்திய அணியில் 4 வது வீரரை தேர்வு செய்வதில் தற்போதும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அந்த இடத்திற்கு இன்னும் சரியான வீரர் தேர்வு செய்யப்படவில்லை. விஜய் சங்கர் அங்கு வலுவாக ஆடுவதில்லை. ஆனால் அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்திய அணி மற்ற அனைத்து துறைகளிலும் மிகவும் வலுவாகவே இருக்கிறது.

நல்ல பட்டியல்

நல்ல பட்டியல்

முக்கியமாக இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் மிக சிறப்பாக இருக்கிறது. அதேபோல் பீல்டிங் மிக மிக நல்ல நிலையில் உள்ளது. இந்திய அணியில் சாஹல், கோலி, ரோஹித், ஜடேஜா (மாற்று) மிக சிறந்த பீல்டர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள். இதற்கு சான்றாக தற்போது உலகக் கோப்பை போட்டிகளில் விடப்பட்ட கேட்ச் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது.

எப்படி தேர்வு

எப்படி தேர்வு

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்துள்ள 30 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணிதான் அதிக கேட்சுகளை விட்டுள்ளது. அதாவது கைக்கு வந்து, பந்து கையில் பட்டு பின் விடப்பட்ட கேட்ச். மொத்தம் இப்படி வந்த 26 கேட்ச்களில் 14 கேட்ச்களை பாகிஸ்தான் விட்டுள்ளது. இதுதான் இந்த தொடரில் விடப்பட்ட கேட்ச்களில் அதிகம்.

வேறு யார்

வேறு யார்

இது போக இங்கிலாந்து அணி 10 கேட்ச்களை விட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா 7, நியுசிலாந்து 6, ஆஸ்திரேலியா 6, வங்கதேசம் 3, மேற்கு இந்திய தீவுகள் 3, இலங்கை 2, ஆப்கானிஸ்தான் 2 கேட்ச்களை விட்டு இருக்கிறது. இந்திய அணி ஒரே ஒரு கேட்ச் மட்டுமே விட்டுள்ளது. 15 பந்துகள் கைக்கு வந்து இருக்கிறது. அதில் 14 பந்துகளை பிடித்த இந்திய வீரர்கள் 1 பந்தை மட்டும் விட்டுவிட்டார்கள்.

மிஸ்ஸானது

மிஸ்ஸானது

சென்ற வாரம் பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் அடித்த பந்தை கே எல் ராகுல் பிடிக்க தவறினார். இது மட்டும்தான் கைக்கு வந்து, இந்தியா நழுவ விட்ட ஒரே கேட்ச். மற்ற அனைத்து கேட்ச்களையும் இந்தியா பிடித்துள்ளது. இந்த ஒரு தவறை மட்டும் இந்தியா செய்யாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ஒரு கேட்ச் கூட விடாத அணி என்ற சிறப்பை பெற்று இருக்கும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான வண்ணமயமான புகைப்படங்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!

Story first published: Monday, June 24, 2019, 11:06 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+