Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் சரி.. ஆனால் இன்னும் இதுமட்டுமே நடக்கவே இல்லை.. கடைசி 2 மணி நேர பரபரப்பில் இந்திய அணி!

Recommended Video

World Cup 2019: IND vs NZ | மழையால் தடைபட்ட பயிற்சி.. இறுதிநேர பரபரப்பில் இந்தியா- வீடியோ

லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் சரியாக பயிற்சி எடுக்க முடியவில்லை. பல்வேறு காரணங்களால் இந்திய அணி வீரர்கள் சரியாக பயிற்சி எடுக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மிகவும் வலுவான அணிகளாக இருக்கிறது.

அதிலும் இந்தியா, இங்கிலாந்து மிக மிக வலுவான அணியாக உருவெடுத்து இருக்கிறது. இரண்டு அணிகளும் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

இங்கிலாந்தில் வருடம் முழுக்க மழை பெய்யும்.ஆம், அங்கு பெரும்பாலும் மழை பெய்வதற்கு ஏற்ற வானிலையே அதிகம் நிலவும். அதிலும் ஜூன், ஜூலை மாதங்களில் மிக மோசமாக மழை பெய்யும். ஆனால் ஐசிசி அதை எதையும் சிந்திக்காமல் இங்கிலாந்தில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. இதுதான் பல்வேறு அணிகளுக்கு பெரிய இடைஞ்சலாக மாறி உள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

இங்கிலாந்து முழுக்க மிக மிக மோசமாக மழை பெய்து வருவதால் உலகக் போட்டி மிக மோசமாக தடை பட்டு இருக்கிறது. இதுவரை மொத்தம் மூன்று போட்டிகள் உலகக் கோப்பையில் இந்த முறை மழையால் கைவிடப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்தில் இப்போது மட்டுமில்லாமல் இனியும் கூட மோசமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

இனியும்

இனியும்

ஏற்கனவே மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா நியூசிலாந்து மோதும் போட்டிகளும் மழையால் பாதிக்கப்படும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் தற்போது அங்கு எல்லோ அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சி இல்லை

பயிற்சி இல்லை

இதனால் நேற்று இந்திய அணி வீரர்கள் 2.30 மணி நேரம் மட்டுமே பயிற்சி செய்தார். அவர்கள் பயிற்சி செய்த நோட்டிங்ஹாம் மைதானத்திலும் மழை பெய்ததால் அவர்களால் முழுதாக வெளியே பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் உள் அரங்கில் சிறிது நேரம் பயிற்சி முடித்துவிட்டு, பின் ஓய்வு எடுத்தனர். கோலியும் தவான் பிரச்சனை காரணமாக சரியாக பயிற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை.

2 மணி நேரம்

2 மணி நேரம்

இந்த நிலையில் இன்று போட்டி துவங்க இன்னும் 2 மணி நேரம்தான் இருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் கடைசி நேர வார்ம் அப் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களாக சரியாக பயிற்சி செய்ய முடியாத வருத்தத்தில் தற்போது இந்திய வீரர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, June 13, 2019, 13:39 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+