Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த கிரீடத்தை பறிகொடுத்தோம்.. இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலையா?.. 3 விக்கெட்டால் வந்த வினை!

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 3 வீரர்களை ஸ்பின் பவுலிங்கிற்கு பறிகொடுத்ததன் மூலம் நல்ல சாதனை ஒன்றை தவறவிட்டு இருக்கிறது.

உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய முடிவு செய்தார். போட்டியின் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி மிகவும் நிதானமாக ஆடி வருகிறது.

அவுட்டானார்கள்

அவுட்டானார்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் 1 ரன்னில் அவுட்டானார். முஜீப் உர் ரஹ்மான் ரோஹித் களத்திற்கு வந்ததும் சரியாக கேரம் பால் போட்டார். நேராக வந்த பந்து, மிக மிக தாமதம் ஆப் ஸ்டம்ப் பக்கம் திரும்பியதில் ரோஹித் சர்மா அவுட்டானார்.

கே எல் ராகுல் மோசம்

கே எல் ராகுல் மோசம்

அதன்பின் கே எல் ராகுல் பொறுப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் சரியாக ஆடவில்லை. கே எல் ராகுல் நபி போட்ட சூழலில் ஒரு மோசமான ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்தார். அழகாக வந்த பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சி செய்து தேவையில்லாமல் அவர் அவுட்டானார்.

இன்னொருவர்

இன்னொருவர்

அதேபோல் அதன்பின் நிதானமாக ஆடிய விஜய் சங்கரும் ரஹ்மத் சூழலில் சிக்கினார். அழகாக லெக் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 41 பந்தில் 29 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சாதனை

என்ன சாதனை

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா இதுவரை ஆடிய 3 லீக் ஆட்டங்களில் எப்போதும் ஸ்பின் பவுலிங்கில் அவுட் ஆனது இல்லை. 3 போட்டியில் இந்தியா மொத்தமாக 53 ஸ்பின் ஓவர்களை பிடித்துள்ளது. இதில் 339 ரன்களை எடுத்து இருந்தது. ஆனால் ஒரு விக்கெட் கூட விழவில்லை. தற்போது அந்த அழகான மகுடத்தை ஒரே போட்டியில் இழந்து இருக்கிறது ஒரே போட்டியில் இந்தியா வருசையாக் ஆப்கான் ஸ்பின் பவுலர்களிடம் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கிறது.

Story first published: Saturday, June 22, 2019, 17:23 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+