தெரிந்தே தப்பு பண்ணிட்டீங்க.. இது 2வது முறை.. இந்திய அணி செய்த தவறால் ஏற்பட்ட பெரிய இழப்பு!
லண்டன்: இந்திய அணி செய்த தவறு ஒன்றால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 350+ ரன்களை எடுக்க வேண்டிய அளவிற்கு மிகவும் வலுவாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ந்த தவறால் இந்திய அணியால் 350+ ரன்கள் எடுக்க முடியவில்லை. மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

எத்தனை ரன்கள்
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. கே எல் ராகுல் இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார்.அதே போல் ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். இதில் 14 பவுண்டரி 3 சிக்ஸர் அடக்கம்.

அதிரடியாக ஆடினார்
அதன்பின் கோலி இந்திய அணி சார்பாக அதிரடியாக ஆடி வந்தார். இவர் 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். ஆனால் அவர் அவுட் ஆகாமலே அவுட்டாகி வெளியே சென்றார். அதன்பின் களமிறங்க விஜய் சங்கர் மிக மோசமாக சொதப்பினார். அவர் 15 ரன்களில் 15 ரன்கள் மட்டும் எடுத்தார்.

மிக மோசம்
இந்த போட்டியில் விஜய் சங்கர் மிக மோசமாக சொதப்பினார். அதற்கு பின் களமிறக்கிய கேதார் ஜாதவ் கூட இறங்கிய உடன் பவுண்டரி அடித்தார். ஆனால் விஜய் சங்கர் பவுண்டரி அடிக்காமல் மோசமாக சொதப்பினார். அதோடு கடைசி ஓவரில்தான் அவர் பவுண்டரியே அடித்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது.

வாய்ப்பு போனது
ஆனால் கேதார் ஜாதவ் களமிறங்கி இருந்தால் இந்திய அணி கண்டிப்பாக 350+ ரன்களை கடந்து இருக்கும். அந்த நல்ல வாய்ப்பை இந்திய அணி செய்த தவறால் தவறவிட்டது . ஏற்கனவே நிதாஸ் கோப்பையில் விஜய் சங்கர் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக சொதப்பியது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவது முறையாக விஜய் சங்கர் சொதப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications