Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பேர் என்று நினைத்த நியூஸி.. 4 பேரை களமிறக்கும் கோலி.. இந்த டிவிஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை!

Recommended Video

World cup 2019: IND vs NZ: 3 பேர் என்று நினைத்த நியூஸி.. 4 பேரை களமிறக்கும் கோலி?- வீடியோ

லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வித்தியாசமான திட்டம் ஒன்றை கையில் எடுத்து இருக்கிறது. வலுவான நியூசிலாந்து அணியை எதிர்கொள்வதற்காக இந்திய அணி புதிய மாற்றங்கள் செய்ய உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணி என்றால் அது நியூசிலாந்து மற்றும் இந்திய அணி இரண்டும்தான். இந்த அணிகள்தான் தாங்கள் மோதிய போட்டிகள் எதிலுமே தோல்வி அடையவில்லை.

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய அணியோ இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வென்றுள்ளது.

இன்று மாற்றம்

இன்று மாற்றம்

இந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. அதன்படி இந்திய அணியில் காயம் காரணமாக தவான் ஓய்வு எடுக்க போகிறார். தவான் ஓய்வு காரணமாக அவரின் இடத்தில் கே எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். இத்தனை நாட்கள் 4 வது இடத்தில் அவர் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4வது இடம் யாருக்கு

4வது இடம் யாருக்கு

இதனால் 4வது இடத்தில் கண்டிப்பாக விஜய் சங்கர் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் வெளியாகும். இன்று மதியம் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்படுவார். இதற்காக அவர் நேற்றே பல மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாற்றம்

அடுத்த மாற்றம்

அதேபோல் இந்திய அணியில் இன்னொரு மாற்றமும் செய்யப்பட உள்ளது. அதாவது தற்போது இந்திய அணியில் குல்தீப் யாதவ் சரியான பார்மில் இல்லை. இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 100 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் 1 விக்கெட்தான் எடுத்து இருக்கிறார். அவரின் இந்த பார்ம் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

மாட்டார்

மாட்டார்

இதனால் இன்று நடக்கும் போட்டியில் அவர் களமிறங்க மாட்டார் என்று கூறுகிறார்கள். ஆகவே இந்திய அணியில் அவருக்கு பதிலாக ஜடேஜா அணிக்குள் வருகிறார். குல்தீப்பிற்கு பதிலாக இவர் ஸ்பின் போடுவார் என்று கூறுகிறார்கள். இது இந்திய அணிக்கு நல்ல பலமான பேட்டிங் ஆர்டரையும் கொடுக்கும்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

இதனால் தற்போது இந்திய அணியில் 4 ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். பாண்டியா, ஜடேஜா, விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய நான்கு வீரர்கள் ஆல் ரவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் இந்திய அணி மூன்று ஆல் ரவுண்டர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தியா 4 வீரர்களுடன் இறங்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 13, 2019, 11:21 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+