For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் போட்டியையே மாற்றுவார்.. கேன், நீசமை சமாளிக்க கோலி போடும் பிளான்.. இந்திய அணியில் புது என்ட்ரி!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் சில மாற்றங்கள் இன்று செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

ICC World Cup 2019: அவர் போட்டியையே மாற்றுவார்..கேன்,நீசமை சமாளிக்க கோலி போடும் பிளான்- வீடியோ

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியில் சில மாற்றங்கள் இன்று செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடக்க உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை மட்டும்தான் இந்தியா எதிர்கொள்ளவில்லை. இதனால் இன்று நடக்கும் போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்று அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளில், கண்டிப்பாக இந்தியாவின் கைதான் இதில் கொஞ்சம் மேலே இருக்கிறது. நியூசிலாந்து அணியை விட இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. அதேபோல் நியூசிலாந்து பவுலிங்கை விட இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நியூசிலாந்து அணியின் மிடில் மிகவும் வலுவாக இருக்கிறது. எப்போதும் நியூசிலாந்து அணியை காப்பது அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேன் வில்லியம்சன், கோலின் டி கிரான்தம், ஜேம்ஸ் நீசம் ஆகியோர் மட்டும்தான். இவர்களின் விக்கெட்டுகளை எடுப்பதுதான் இந்திய அணிக்கு மிகவும் சவாலான காரியம் ஆகும்.

இன்று வரும்

இன்று வரும்

இதனால் இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் இன்று சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில போட்டிகளாக சரியாக பந்து வீசாத, அதிக ரன்களை கொடுத்து சரியாக விக்கெட் எடுக்காத குல்தீப் யாதவ் இந்த முறை இந்திய அணியில் விளையாட மாட்டார் என்று கூறுகிறார்கள். முக்கியமாக மான்செஸ்டர் பிட்சில் இந்திய அணி குல்தீப் யாதவை களமிறக்காது என்று கூறுகிறார்கள்.

யார் வருவார்

யார் வருவார்

இதனால் அவருக்கு பதிலாக கண்டிப்பாக இன்று சஹால் இந்திய அணியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. சாஹல், ஜடேஜா இரண்டு பேரும் இந்திய அணியில் நல்ல ஸ்பின் பவுலர்களாக இருப்பார்கள். சாஹல் கண்டிப்பாக மான்செஸ்டர் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 9, 2019, 9:24 [IST]
Other articles published on Jul 9, 2019
English summary
ICC World Cup 2019: India may change their spin option in today match against New Zealand.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+