Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் எதுவுமே நடக்கல.. 1 நாள்தான் இருக்கு.. தொடர் பிரச்சனை.. இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்!

Recommended Video

World Cup 2019: Ind Vs Nz: தொடர் பிரச்சனை.. இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்!- வீடியோ

லண்டன்: இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியை சந்திக்க இருக்கும் சூழ்நிலையில் நிறைய குழப்பங்கள், பிரச்சனைகள் இந்திய அணிக்குள் நீடித்து வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அணியும் அதிரடியாக இரண்டு போட்டிகளையே தூசி தட்டி வெற்றிபெற்றுவிட்டது.

அதேபோல் நியூசிலாந்து அணியும் வரிசையாக மூன்று போட்டிகளை வென்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் அந்த அணிதான் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.

சவாலான போட்டி

சவாலான போட்டி

இந்த இரண்டு அணிகள்தான் நாளை தங்களை நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறது. இரண்டு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆஸ்திரேலியா இந்தியா போட்டியை விட இந்த போட்டி அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று கணித்து இருக்கிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணி நிறைய சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கிறது. நாளை நடக்கும் போட்டிக்கு முன்பாக இன்று இந்திய அணி நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி உள்ளது. முக்கியமாக இந்திய அணியில் நிறைய அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை 1

பிரச்சனை 1

இந்திய அணிக்கு இருக்கும் முதல் பிரச்சனை தவான். அவரின் விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவரின் இடத்தில் யாரை ஆட வைக்கலாம் என்று இந்திய அணி இன்னும் முடிவு செய்யவில்லை. காயத்தால் அவரால் கண்டிப்பாக விளையாட முடியாது. இதனால் நாளை காலைக்குள் அவரின் இடத்திற்கு புதிய நபரை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்த சிக்கல்

அடுத்த சிக்கல்

அதேபோல் ஒருவேளை இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக கே எல் ராகுல் களமிறங்கினால், அவர் எப்போதும் விளையாடும் இடமான 4 வது இடத்திற்கு புதிய வீரரை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் சரியாக ஆடாத ஐந்தாவது இடத்தில் கேதார் ஜாதவிற்கு பதில் அவரின் இடத்தில் திறமையான புதிய வீரரை தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.

பயிற்சி பிரச்சனை

பயிற்சி பிரச்சனை

மிக முக்கியமாக மழை காரணமாக இந்திய அணி இப்போது வரை தனது பயிற்சியை தொடங்கவில்லை. இதனால் இந்திய அணி பயிற்சி இல்லாமல் போட்டியில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இத்தனை சவால்கள், பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் நாளை நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 12, 2019, 14:39 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+