Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. இந்திய அணி இப்படி ஒரு முடிவை எடுக்க போகிறதா? புதிய வீரரின் வரவால் மகிழ்ச்சியில் கோலி படை!

Recommended Video

World Cup 2019 : Ind Vs SL : சொன்னபடி செய்த கோலி.. அணியில் செய்த மாற்றம்- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் இன்று முக்கியமான சில மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. சோதனை முயற்சியாக நிறைய மாற்றங்கள் இந்திய அணிக்குள் நடக்க வாய்ப்புள்ளது என்று கணிப்புகள் தெரிவிக்கிறது.

இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடக்கிறது. இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் கடைசி லீக் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஆனால் இந்தியா தோல்வி அடைந்தால் பெரிய சிக்கல்கள் எதுவும் அணிக்கு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து வெற்றிகளை குவித்தாலும், நிறைய இடங்களில் இந்திய அணி பலவீனமாக இருக்கிறது. முக்கியமாக இந்திய அணியில் ஓப்பனிங் அத்தனை நம்பிக்கை அளிக்கும் ஒரு விஷயமாக இல்லை. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினாலும் கூட கே எல் ராகுல் அணிக்காக பெரிய அளவில் அதிரடியாக ஆடுவது கிடையாது.

என்ன மோசம்

என்ன மோசம்

முக்கியமாக இவர் வலுவான பவுலிங் கொண்ட அணிகளுக்கு எதிராக அதிரடியாக ஆடுவது கிடையாது. முதல் 10 ஓவர்களில் அதிக பந்துகளை சந்திக்கும் இவர், ரன்களை எடுக்காமல் சொதப்புகிறார். அதன்பின் 50 ரன்களுக்கு உள்ளாகவே அவுட்டாகி விடுகிறார். வங்கதேசம் அணிக்கு எதிராக மட்டும் இவர் அதிரடியாக ஆடினார்.

வந்துள்ளார்

வந்துள்ளார்

இந்த நிலையில் இந்திய அணிக்குள் தற்போது மாற்று வீரராக மயங்க் அகர்வால் களமிறங்கி உள்ளார். இந்த வருடம் முழுக்க மயங்க் அகர்வால் இங்கிலாந்தில் நிறைய தொடர்கள் விளையாடிய காரணத்தாலும், அதில் தொடர்ந்து நல்ல பார்மில் இருந்த காரணத்தாலும் தற்போது அணிக்குள் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.

ஓப்பனிங் வீரர்

ஓப்பனிங் வீரர்

தொடக்க வீரரான இவர் இன்று இந்திய அணிக்காக களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இவர் இதுவரை ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடியது கிடையாது. இதனால் இன்று நடக்கும் போட்டி அறிமுக போட்டி என்பதால் இவர் அதிக முக்கியத்துவம் பெறுவார் என்கிறார்கள். கே எல் ராகுல் மீண்டும் மீண்டும் 4வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.

சிக்கல் இல்லை

சிக்கல் இல்லை

இன்று நடக்கும் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் பெரிய அளவில் சிக்கல் கிடையாது. இதனால் இன்று கோலி எந்த விதமான சோதனை முயற்சிகளை வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். அதனால் கோலி பெரும்பாலும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, July 6, 2019, 10:33 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+