Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவே போதும்.. இனி கண்டிப்பாக நமக்குத்தான் வெற்றி.. ஒருவழியாக இறுதி முடிவை எடுத்த இந்திய அணி!

Recommended Video

இலங்கையை 7 விக். வித்தியாசத்தில் வென்ற இந்தியா

லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், கோலி படை செமி பைனல் போட்டிக்காக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தை இலங்கை அணிக்கு எதிராக தற்போது ஆடி வருகிறது.

போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணி இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன இப்போது

என்ன இப்போது

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இன்று இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி சாஹல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதேபோல் ஷமி நீக்கப்பட்டு அணிக்குள் ஜடேஜா கொண்டு வரப்பட்டு இருந்தார்.

என்ன சமம்

என்ன சமம்

இந்திய அணிக்குள் ஜடேஜா கொண்டு வரப்பட்டு இருப்பதால் அணிக்கு இரண்டு ஸ்பின் ஆப்ஷன்கள் கிடைக்கும். அதே சமயம் இரண்டு ஆல் ரவுண்டர் ஆப்ஷன்களும் கிடைக்கும். அதேபோல் இங்கிலாந்தில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதகமான சூழ்நிலையும் ஜடேஜாவிற்கு இருக்கிறது.

சாஹல் என்ன

சாஹல் என்ன

அதேபோல் குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க பெரிய அளவில் சரியாக பந்து வீசவில்லை. இன்றைய போட்டியிலும் அவர் சரியாக பந்து வீசவில்லை. ஆனால் செமி பைனலுக்கு முன் சஹாலுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் இன்று குல்தீப் களமிறக்கப்பட்டார். செமி பைனலில் மீண்டும் சாஹல் அணிக்குள் கொண்டு வரப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி என்ன

அணி என்ன

இதனால் செமி பைனலுக்கு செல்லும் இந்திய கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். செமி பைனலில் ஆடும் இந்திய அணியை கோலி உறுதி செய்துவிட்டார் என்கிறார்கள். அதன்படி செமி பைனலில் இந்திய அணி சார்பாக கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பண்ட், பாண்டியா, தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர்குமார், சாஹல் ஆகியோர் விளையாடுவர்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, July 6, 2019, 20:32 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+