Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை வீட்டுக்கு அனுப்புங்க.. இவரை கொண்டு வாங்க.. இந்திய அணிக்கு வரப்போகும் லெஜண்ட்.. என்ன பின்னணி?

Recommended Video

WORLD CUP 2019 | தொடரும் குழப்பம்! இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி!- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் நீக்கப்பட்டு புதிய வீரர் ஒருவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

2019 உலகக் கோப்பை போட்டி மிக மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டி பல ஆச்சர்யங்களை சுமந்து இருக்கிறது. இந்தியாதான் இந்த தொடரில் மிகவும் வலிமையான அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம் வகித்து வருகிறது . தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று இந்தியா வீழ்த்திய அணிகள் எல்லாம் மிக வலுவான அணிகள்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

தற்போது இந்திய அணியில் 6வது இடத்திற்கு பெரிய போட்டி நிலவி வருகிறது. தற்போதெல்லாம் 4 மற்றும் 5வது இடத்தில் பாண்டியா மற்றும் தோனி களமிறங்கி விளையாடி வருகிறார். இது இந்திய அணிக்கு நல்ல பலன் அளித்து உள்ளது. கடந்த இரண்டு போட்டியிலும் இது இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனிக்கு பின் களமிறங்கும் வீரர் யார் என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. தோனிக்கு பின் தற்போது விஜய் சங்கர் களமிறங்கி வருகிறார். கே எல் ராகுல் தவான் காயம் காரணமாக தொடக்க வீரராக இறங்கி வருகிறார். இதனால் கே எல் ராகுல் இடத்தில் தற்போது விஜய் சங்கர் களமிறங்கி விளையாடி வருகிறார் .

மோசம்

மோசம்

ஆனால் இவர் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் சரியாக ஆடவில்லை. 15 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்தார். மிகவும் நிதானமாக டெஸ்ட் மேட்ச் ஆடுவது போல ஆடினார். இவர் இரண்டு விக்கெட் எடுத்தாலும், பெரிதாக பந்து வீச்சில் வேரியேஷன் காட்டவில்லை. இது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஜடேஜா

ஜடேஜா

இதனால் இவரின் இடத்திற்கு ஜடேஜாவை கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். ஜடேஜா இத்தனை வருடங்களாக ஆடவில்லை என்றாலும், தற்போது ஐசிசி ஆல் ரவுண்டர் பட்டியலில் 2வது இடத்தில்தான் இருக்கிறார். இவர் பந்து வீச்சும் மிக சிறப்பாக இருக்கிறது. அதேபோல் பேட்டிங்கிலும் சமயங்களில் இவர் உதவுவார். பீல்டிங்கிலும் கலக்கி வருகிறார்.

மிக நல்லது

மிக நல்லது

இதனால் விஜய் சங்கரை அனுப்பிவிட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா கொண்டு வரப்படலாம் என்று கூறுகிறார்கள். ஜடேஜா தோனி இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த பெரிய உதவியாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, June 18, 2019, 14:27 [IST]
Other articles published on Jun 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+