அங்குதான் சொதப்பியது.. எதுவுமே சரியில்லை.. தவறை கண்டுபிடித்த கோலி.. முக்கிய மாற்றத்திற்கு ரெடி!
Recommended Video
லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மோசமான பேட்டிங்கை அடுத்து மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிதான் தற்போது மிகவும் வலிமையான அணியாக இருக்கிறது . அதேபோல் நியூசிலாந்து அணியும் மிகவும் வலிமையாக இருக்கிறது. இரண்டு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.
அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி நேற்று இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்திய அணியின் மோசமான பேட்டிங்தான் நேற்றைய சொதப்பல்களுக்கு முக்கிய காரணம்.

இந்திய ஆர்டர்
இந்திய அணி தற்போது மூன்று ஆல் ரவுண்டர்களுடன் களமிறங்கி விளையாடி வருகிறது. பேட்ஸ்மேன் ஸ்பெஷலிஸ்ட் என்று பார்த்தால் அது வெறும் 4 பேர்தான். ரோஹித், கே எல் ராகுல், தோனி, கோலி மட்டுமே பேட்ஸ்மேன்கள். விஜய் சங்கர், பாண்டியா, மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன்கள்.

என்ன பிரச்சனை
இதனால் இந்திய அணியில் நான்காவது வீரரே ஆல் ரவுண்டராக இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆம், இந்திய அணியில் கே எல் ராகுல், ரோஹித், கோலி இந்த மூன்று பேரில் இரண்டு பேர் சரியாக ஆடினால் போதும். நான்காவது வீரர் ஆல் ரவுண்டராக இருந்தால் பிரச்சனை கிடையாது. ஆனால் இவர்கள் சொதப்பும் நேரத்தில்தான் 4வது வீரர் முக்கியத்துவம் பெறுகிறார்.

நேற்று என்ன நடந்தது
நேற்று அப்படித்தான் தொடக்க வீரர்கள் சொதப்பிய நேரத்தில் 4வது இடத்தில் சரியாக விஜய் சங்கர் இறங்கினார் . ஆனால் இவர் தன்னை நிரூபிக்க வேண்டிய முக்கியமான நேரத்தில் சொதப்பினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் நினைத்து இருந்தால் சரியாக விளையாடி நிரூபித்து இருக்கலாம். ஆனால் 41 பந்துகள் பிடித்த அவர் ஆமை வேகத்தில் மிகவும் மெதுவாக வெறும் 29 ரன்கள்தான் எடுத்தார்.

என்ன
இங்குதான் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது என்பது கோலிக்கும் தெரியும். இதனால் தற்போது 4வது இடத்தில் சரியான பேட்ஸ்மேனை இறக்க கோலி முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. ஆல் ரவுண்டர் இல்லாமல், பேட்ஸ்மேன் ஸ்பெஷலிஸ்டை களமிறக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்காக தினேஷ் கார்த்திக் மற்றும் பண்ட் இடையே தற்போது போட்டி நிலவி வருகிறது.

அடுத்த போட்டி
அடுத்த இந்திய போட்டி வரும் வியாழக்கிழமை நடக்கிறது. இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் போட்டி நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் அல்லது பண்ட் அணியில் எடுக்கப்படலாம். இதனால் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications