Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனியும் வேண்டாம்.. கழற்றி விட்டுவிடுங்கள்.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய பவுலிங்கில் மாற்றம்!

Recommended Video

ICC World Cup 2019: அதிரடி முடிவு எடுத்த கோலி! இந்திய பவுலிங்கில் மாற்றம்!- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் மிக முக்கியமான வீரர் ஒருவரை விளையாடும் அணியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை அணியில் எடுக்க கோலி திட்டமிட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அச்சுறுத்த கூடிய அணியாக உருவெடுத்து இருக்கிறது. இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் மிகவும் வலுவான, எதிரணிக்கு சவால் விடக்கூடிய வீரர்களாக உருமாறி இருக்கிறார்கள்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய போட்டியே இதற்கு சிறந்த உதாரணம் என்று கூட கூறலாம். ஆம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் மிக மிக சிறப்பாக விளையாடினார்கள் என்று கூட கூறலாம்.

என்ன ஆனால்

என்ன ஆனால்

இந்திய அணியில் பவுலிங் மிகவும் சிறப்பாகவே இருந்தது. புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் எல்லோரும் மிக சிறப்பாக பந்து வீசினார்கள். இரண்டு போட்டியிலும் இவர்களின் பந்து வீச்சு பெரிய ஆதிக்கம் செலுத்தியது. அதிலும் பும்ரா, சாஹல் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவ் சரியாக பந்து வீசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குல்தீப் யாதவ் கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியாக பந்து வீசவில்லை. அதேபோல் அவர் ரன்னும் அதிகமாக விட்டுக்கொடுத்தார்.

எவ்வளவு ரன்

எவ்வளவு ரன்

முதலில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் குல்தீப் 1 விக்கெட்டை எடுத்து 44 ரன்கள் கொடுத்தார். அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 55 ரன்கள் கொடுத்தார். ஆனால் விக்கெட் எடுக்கவே இல்லை. இதுதான் தற்போது நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

நீக்க திட்டம்

நீக்க திட்டம்

இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவரின் இடத்தில் வேறு ஒரு வீரரை இறக்க கோலி திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி குல்தீப்பிற்கு பதிலாக ஜடேஜா அவருடைய இடத்தில் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஜடேஜா இறங்கினால் நிறைய நன்மைகள் இந்திய அணிக்கு நடக்கும்.

எப்படி வீரர்

எப்படி வீரர்

ஜடேஜா தற்போது நல்ல பவுலிங் பார்மில் இருக்கிறார். அதே போல் பேட்டிங்கும் இவர் நன்றாக செய்ய கூடியவர், இதனால் பாண்டியா, ஜாதவ், ஜடேஜா என்று மூன்று ஆல் ரவுண்டர்கள் இந்தியாவிற்கு கிடைப்பார்கள். இதனால் இந்திய அணிக்கு நிறைய பவுலிங் ஆப்ஷன்களை கிடைக்கும்.

செம ஐடியா

செம ஐடியா

குல்தீப்பிற்கு வருகிற போட்டியில் ஓய்வு கொடுத்துவிட்டு ஜடேஜாவை இறக்கி சோதனை செய்ய கோலி முடிவு எடுத்து இருக்கிறார் என்கிறார்கள். இவரின் வருகை இந்திய அணிக்கு புதிய பலம் அளிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, June 12, 2019, 14:16 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+