Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெட் அலர்ட்.. அப்படி மட்டும் நடக்கவே கூடாது.... இந்தியா - பாக். போட்டிக்கு இப்படி ஒரு செக்கா?

லண்டன்: இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்குமா என்பதே சந்தேகமான விஷயம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மூன்று வாரம் முன் ஆரம்பித்த கிரிக்கெட் தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.

ஆனால் ஏற்கனவே மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது .

வானிலை என்ன

வானிலை என்ன

இதனால் மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் மழை காரணமாக வரிசையாக போட்டிகள் ரத்தாகி வருகிறது. அங்கு இன்னும் மழை தொடரும் என்று வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோசம்

மோசம்

பொதுவாக இங்கிலாந்தில் வருடம் முழுக்க எப்போது மழை பெய்யும் என்றே கணிக்க முடியாது. இந்த மாதம் இங்கிலாந்தில் வெயில் அடிக்க வேண்டும். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்தில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. இது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

எங்கு உள்ளது

எங்கு உள்ளது

தற்போது ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. நியூஸிலாந்து அணி 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் 3 இடம் வகிக்கிறது. இந்தியா 5 புள்ளிகளுடன் 4ம் இடம் வகிக்கிறது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த நிலையில் இங்கிலாந்தில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது மான்செஸ்டரில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இந்த மழை இன்றும் தொடரும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் போட்டி நடக்கும் மான்செஸ்டர் பகுதிக்கு இன்று கனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு கண்டிப்பாக மழை பெய்ய 95% வாய்ப்புள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

பெரும் கோபம்

பெரும் கோபம்

இதுதான் தற்போது ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உலகில் இரண்டு முக்கிய கிரிக்கெட் அணிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று ஒன்றை ஒன்று எதிர்கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய பரபரப்பு இருக்கும். இவ்வளவு முக்கியமான போட்டி மழையால் தடைபடுவது சரியாக இருக்காது என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 7:45 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+