Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்களே இப்படி கைவிட்டா எப்படி? களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது?

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் மிக மோசமாக திணறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதும் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்தியா இவ்வளவு மோசமாக ஆடும் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். இந்த தொடரில் ஆடியதிலேயே இந்திய அணியின் மிக மோசமான பேட்டிங் என்றால் அது கண்டிப்பாக இன்றைய பேட்டிங்காகத்தான் இருக்கும்.

இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து திணறி திணறி மிகவும் மோசமாக ஆடியது. இன்று மைதானம் அப்படியே பவுலிங் பிட்சாக மாறி இருப்பதால் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள்.

செம

செம

இந்திய அணியின் பவுலிங் எப்படி சிறப்பாக இருந்ததோ அதேபோல் இன்று நியூசிலாந்து அணியின் பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. தற்போது அந்த இலக்கை நோக்கி இந்தியா திணறி திணறி ஆடி வருகிறது.

விக்கெட்

விக்கெட்

தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா 1 ரன்கள் அடித்து இருந்த நிலையில் டாம் லதாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் கோலி நியூசிலாந்தின் போல்ட் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அவரும் அவுட்டாகும் போது வெறும் 1 ரன்தான் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மிக மோசம்

மிக மிக மோசம்

அதன்பின் கே எல் ராகுல் டாம் லதாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரும் 1 ரன்கள் எடுத்து இருந்த போதுதான் அவுட்டானார். அதன்பின் பொறுமையாக ஆடிய தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

என்ன ஆனது

என்ன ஆனது

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டான பின் இந்திய அணி சார்பாக தோனிதான் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் தோனிக்கு பதிலாக பாண்டியா களமிறங்கி உள்ளார். ஒரு பக்கம் பண்ட் ஆடி வருகிறார். இன்னொரு பக்கம் பாண்டியா ஆடி வருகிறார். இரண்டு பேரும் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள்.

கடவுளே

கடவுளே

இப்படி இருக்கும் நிலையில் களத்தில் பண்டிற்கு துணையாக தோனி போன்ற மூத்த வீரர்கள் ஆடுவதுதான் சரியாக இருக்கும். அவரின் டெஸ்ட் ஸ்டைல் இன்னிங்ஸ்தான் இப்போது தேவை. ஆனால் அதற்கு பதிலாக பாண்டியா போன்ற டி 20 ஸ்டைல் பேட்ஸ்மேன்கள் ஏன் இறக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லோரும் அதிர்ச்சி

எல்லோரும் அதிர்ச்சி

தோனி எப்போதும் மெதுவாக ஆடி பின் போக போக அதிரடி காட்டுவார். அவரை போன்ற வீரர்கள் இப்போது இறங்கினால்தான் சரியாக இருக்கும். ஆனால் அவரே இப்படி இந்திய அணியை கைவிட்டால் எப்படி என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Wednesday, July 10, 2019, 17:33 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+