கவனமாக இருங்கள்.. ஏன் இப்படி செய்கிறீர்கள்.. தளர்ந்த கட்டுப்பாடு.. இந்திய அணிக்கு வார்னிங்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக வலுவான அணியாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது. மிகவும் வலுவான அணிகள் என்று கருதப்பட்ட இங்கிலாந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது, ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது.
அதே சமயம் நியூசிலாந்து சிறிய அணிகளை மட்டும் வீழ்த்தி, இன்னும் பெரிய அணி எதையும் எதிர்கொள்ளாமல் இருக்கிறது. இந்திய அணி மட்டுமே மிகவும் வலுவான அணியாக வலம் வருகிறது.

இதனால் என்ன
இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்கு செல்லும் முன் நிறைய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.இங்கிலாந்தில் விளம்பர படங்களில் நடிக்க கூடாது. இங்கிலாந்தில் அனுமதி இல்லாமல் வெளியே அவுட்டிங் செல்ல கூடாது, பாகிஸ்தான் போட்டி முடியும் வரை குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல கூடாது என்று நிறைய கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது.

இப்போது என்ன
ஆனால் போட்டி தொடங்கும் முன்பே இந்திய வீரர்கள் சில இடங்களுக்கு அவுட்டிங் சென்றார்கள். ஐபிஎல் போட்டியில் நிலவி வந்த டென்ஷன் குறைய வேண்டும் என்றும் இவர்கள் இப்படி சுற்றினார்கள். அதன்பின் இந்திய அணி வீரர்கள் நன்றாகவே பயிற்சி செய்தார்கள் என்றுதான் கூற வேண்டும். பயிற்சியின் பலனாக இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியும் பெற்றது.

ஆனால் என்ன
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட வெற்றிக்கு பின் இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கிறது . இந்திய அணி வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிலாந்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக இந்திய வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழித்து வருகிறார்கள்.

நேற்று இல்லை
முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி கூட செய்யவில்லை. இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டி இருந்தும் கூட, இந்திய வீரர்கள் எந்த விதமான பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் வார்ம் அப் செய்ய கூட வெளியே வரவில்லை. மூன்று நாட்களுக்கு முன்தான் இந்திய அணி கடைசியாக பயிற்சி செய்தது. இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏன் இப்படி
இது தொடர்பாக டிவிட்டரில் நிறைய இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஏன் இந்திய வீரர்கள் இப்படி இருக்கிறார்கள். இந்தியா இனிதான் இங்கிலாந்து போன்ற வலுவான அணியை எதிர்கொள்ள வேண்டும். அதனால் இந்தியா இனிதான் கவனமாக இருக்க வேண்டும். இப்படி அலட்சியமாக இருக்க கூடாது என்று அறிவுரை வழங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications