Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட பொறுப்பில்லை.. மிக மோசமாக சொதப்பிய இந்திய அணி.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் மோசமாக சொதப்பியதற்கு பின் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்திய வீரர்கள் பொறுப்பற்று செய்த ஒரு காரியம் இன்று பேட்டிங்கின் போது பட்டவர்த்தனமாக தெரிந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பி வருகிறது.

மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான்.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே பொறுப்பான ஷாட்களை அடிக்கவில்லை. முக்கியமாக தொடக்க வீரர்கள் மிக மிக மோசமான ஷாட்களை ஆடி தேவையில்லாமல் அவுட் ஆனார்கள்.

எப்படி இருந்தது

எப்படி இருந்தது

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட வெற்றிக்கு பின் இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கிறது . இந்திய அணி வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிலாந்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக இந்திய வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழித்து வருகிறார்கள். இதனால் இந்திய வீரர்கள் சரியாக பயிற்சி செய்யவில்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்திய வீரர்கள் சரியாக பயிற்சியும் செய்யவில்லை.முதலில் புதன், வியாழன் மட்டுமே இந்திய வீரர்கள் பயிற்சி செய்தனர். ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய வீரர்கள் வார்ம் அப் கூட செய்யவில்லை. நேற்று முழுக்க இந்திய வீரர்கள் யாரும் ஒன்றாக எந்த ஆலோசனையும் செய்யவில்லை.

மோசம்

மோசம்

நேற்று இந்திய வீரர்கள் சில இடங்களுக்கு அவுட்டிங் சென்றார்கள். எல்லா வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவளித்தனர். மதியம் போட்டி துவங்கும் ஒரு மணி நேரம் முன்புதான் வார்ம் அப் செய்துவிட்டு களத்திற்கு வந்து இருக்கிறார்கள். இதனால்தான் இன்று ஆப்கானிஸ்தான் அணியை சமாளிக்க முடியாமல் வரிசையாக சுருண்டனர். இதற்கு எதிராக தற்போது ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Saturday, June 22, 2019, 18:53 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+