Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளான் ஏ.. பிளான் பி.. அடுத்த போட்டி வேறு மாதிரி இருக்கும்.. வெளியான இந்தியாவின் அதிரடி திட்டம்!

லண்டன்: மேற்கு இந்தியா தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி எப்படி விளையாட போகிறது, இதற்கான திட்டங்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தொடரில் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இந்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய அணி மிகவும் வலுவான அணியாக இந்த தொடரில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. இதுவரை ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடையவில்லை.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி மட்டும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி 9 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

கடைசியாக நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகவும் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றது. கடைசி வரை இந்த போட்டி மிகவும் திரில்லாக சென்றது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் ஸ்பின் பவுலர் சாஹல் கருத்து தெரிவித்தார். இந்திய அணியின் பிளான் குறித்து அவர் பேசியுள்ளார். அடுத்த போட்டிக்காக நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம். மேற்கு இந்திய தீவுகள் வீரர் ரசல் நல்ல திறமையான வீரர். நன்றாக அடிக்க கூடிய வீரர். ஆனால் அவரை விக்கெட் எடுக்க எங்களிடம் சில திட்டங்கள் இருக்கிறது.

செய்து உள்ளோம்

செய்து உள்ளோம்

ஐபிஎல் போட்டியிலேயே அவரின் விக்கெட்டுகளை நாங்க நிறைய முறை எடுத்து இருக்கிறோம். ஐபிஎல் அணிக்காக விளையாடுவதும் இதுவும் வேறு வேறு. அதில் பார்மில் இல்லாத வீரர்கள் கூட இதில் பார்மிற்கு திரும்பி இருக்கிறார்கள். இதற்கு காரணம் வேறு எதுவும் இல்லை. அழுத்தம் தான். நம் நாட்டிற்கு விளையாடும் போது தானாக அந்த அழுத்தம் வந்துவிடும்.

கடைசியில் மாற்றுவோம்

கடைசியில் மாற்றுவோம்

நாங்கள் மேற்கு இந்திய தீவுகள் பேட்டிங் ஆர்டரை பொறுத்து எங்கள் பவுலிங்கை மாற்றுவோம். அதேபோல் அவர்களின் பிளேயிங் லெவனை பொறுத்தும் எண்களின் பேட்டிங் ஆர்டரும் மாறும். நாங்கள் அடுத்த போட்டிக்காக நிறைய பிளான்களை வைத்து இருக்கிறோம். கெயில், ரசலை சமாளிக்க பவுலிங் இணையும் நிறைய பிளான் வைத்துள்ளது என்று சாஹல் கூறியுள்ளார்.

Story first published: Monday, June 24, 2019, 16:49 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+