Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் இனி தேவையில்லை.. நியூஸி.க்கு எதிராக வீரர்களை லாக் செய்த கோலி.. இந்தியாவின் பிளேயிங் 11 இதுதானா?

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட போகும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடர் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது.

இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடக்கிறது. இரண்டு அணிகளும் பைனலுக்கு செல்வதற்காக மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் தினேஷ் கார்த்திக், பண்ட் வருகைக்கு பின் பலம் பெற்றுள்ளது. 8 பேர் வரை இந்திய அணியில் நன்றாக பேட்டிங் செய்ய கூடிய நபர்கள். ஜடேஜாவும் அணிக்குள் இருப்பதால் பேட்டிங் பலம் கூடி உள்ளது.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பின்வருமாறு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித், கே எல் ராகுல் தொடக்க வீரர்கள். கோலி மூன்றாவது வீரர். பண்ட், பாண்டியா, தோனி, தினேஷ் கார்த்திக்கு ஆகியோர் அடுத்தடுத்து இறங்குவார்கள். கடைசியில் ஜடேஜா களமிறங்குவார். அதன்பின் பவுலர்கள் களமிறங்குவார்கள்.

பவுலிங் எப்படி

பவுலிங் எப்படி

இந்திய அணியில் ஸ்பீட் பவுலர்கள் புவனேஷ்வர் குமார், பும்ரா இருவரும் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். ஜடேஜா இருப்பதால் ஸ்பின் ஆப்ஷன் ஒன்று ரெடியாக உள்ளது. இன்னொரு ஸ்பின் பவுலராக சென்ற போட்டியில் குல்தீப் விளையாடினார். இந்த போட்டியில் அவருக்கு பதில் சாஹல் இறங்குவார் என்கிறார்கள்.

 சரி இல்லை

சரி இல்லை

இந்த தொடரில் குல்தீப் சரியாக பந்து வீசவில்லை. பெரிதாக எந்த போட்டியிலும் அவர் விக்கெட் எடுக்கவில்லை. அதே சமயம் அவர் அதிக அளவில் ரன்களையும் அள்ளிக்கொடுத்தார். அதனால் இனி வரும் இரண்டு போட்டிகளிலும் குல்தீப் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

என்ன அணி

என்ன அணி

இதனால் நியூசிலாந்துக்கு எதிராக இன்று இந்திய அணி சார்பாக ரோஹித், கே எல் ராகுல், கோலி, பண்ட், பாண்டியா, தோனி, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 9, 2019, 12:06 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+