அவர்களை இந்த முறை வீழ்த்த முடியாது.. ஜூலை 2 நடக்கும் போட்டி.. இந்தியாவை காலி செய்ய போகும் 2 பேர்!
லண்டன்: தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து வெற்றியை குவித்து வரும் இந்திய அணி முக்கியமான லீக் ஆட்டம் ஒன்றில் தோல்வி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள்.
இந்த உலகக் கோப்பை போட்டி பல ஆச்சர்யங்களை சுமந்து இருக்கிறது. வரிசையாக தோல்வி அடையும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி இருக்கிறது. வங்கதேசம் அணி மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருக்கிறது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் தோல்வியே அடையாமல் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. டாப்பில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவிடம் தோல்வி அடைந்துவிட்டது.

இந்தியா வெற்றி
இந்தியாதான் இந்த தொடரில் மிகவும் வலிமையான அணி என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று இந்தியா வீழ்த்திய அணிகள் எல்லாம் மிக மிக வலுவான அணிகள். முக்கியமான ஆஸ்திரேலியா அணியை திட்டம் போட்டு எளிதாக வீழ்த்தியது . ஆனால் நியூசிலாந்து அணி சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்னொரு வலுவான அணி
இந்த தொடரில் இன்னொரு வலுவான அணியாக வங்கதேசம் அணி உருவாகி உள்ளது. தற்போது வங்கதேசம் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி, 2 போட்டியில் தோல்வி என்று வங்கதேசம் வலுவாக மாறிக் கொண்டே இருக்கிறது. முக்கியமாக அந்த அணி தென்னாபிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இருக்கிறது.

வெற்றி வாய்ப்பு
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு இந்தியாவிற்கு எதிராக வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. வரிசையாக வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைய கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

மிக மோசம்
முக்கியமாக வங்கதேசம் அணியின் ஷாகிப் அல் ஹசன்தான் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர். அதேபோல் லிடோன் தாஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி போட்டியை மாற்றும் வல்லமை கொண்டவராக இருக்கிறார் . இதனால் இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

என்ன நடக்கும்
இவர்களை இந்திய அணி எவ்வளவு சீக்கிரம் வீழ்த்துகிறதோ அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்கும். இதனால் இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி அதிக கவனம் பெற்று உள்ளது. ஜூலை 2ம் தேதி கிரிக்கெட் உலகமே பெரிய பரபரப்பில் இருக்க போகிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications