இந்திய அணியை பழி வாங்குகிறார்.. பிடித்து விசாரியுங்கள்.. ஒருவருக்கு எதிராக குவியும் கோடி புகார்கள்!
Recommended Video
லண்டன்: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து வரும் வேளையில் முக்கியமான நபர் ஒருவருக்கு எதிராக கடுமையான புகார்களை வைத்து இருக்கிறார்கள்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிக்கு எதிராக நேற்று உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது.
இந்த நிலையில் எல்லா இந்திய போட்டிகளை போலவே இந்த போட்டியில் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடுவர் ஒருவரால் தொடர்ந்து இந்திய போட்டிகளில் ரசிகர்கள் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.

முதலில்
முதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்தான் அந்த சம்பவம் நடைபெற்றது. இந்திய பவுலிங்கின் போது 29 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அலீம் டெர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியாவிற்கு இருந்த டிஆர்எஸ் வாய்ப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால் கோலி அலீம் டெர்ரிடம் இதுகுறித்து வாதம் செய்தார்.

என்ன வாதம்
நீண்ட நேரம் கோலி நடுவரிடம் வாதம் செய்தார். இது சரியான விக்கெட்தானா என்று மீண்டும் மீண்டும் கேட்டார். இந்த நிலையில் அந்த நடுவரிடம் சண்டை போட்டதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டார்.

அட
அதேபோல் நேற்று போட்டியில் ஷமி ஓவரில் ஷாகிப் அல் ஹசன் இன்சைட் எட்ஜ் ஆனார். இது பார்க்க எல்பிடபிள்யூ போல இருந்தது. பேட்டில் பந்து பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதனால் இதற்கு கோலி எல்பிடபிள்யூ என்று விக்கெட் கேட்டார். நடுவர்கள் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் கோலி ரிவ்யூ கேட்டார்.

அவரே மறுப்பு
ஆனால் மூன்றாவது நடுவர் இதை சோதித்து பார்த்துவிட்டு விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதை மறுத்த மூன்றாவது நடுவரும் அலீம் டெர்தான். அந்த பந்து பேட்டில் படுவதற்கு முன்பே காலில் பட்டது போல இருந்தது. இதையடுத்து கோலி நேராக சென்று நடுவரிடம் வாதம் செய்தார். இப்படி தொடர்ந்து அலீம் டெர் செய்து வருவது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

எந்த ஊர்
அலீம் டெர் பாகிஸ்தானை சேர்ந்தவர். இதனால் அவர் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார் என்று புகார் உள்ளது. இந்தியாவை அவர் பழிவாங்குகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான இந்திய போட்டியில் அலீம் கொஞ்சம் கூட நியாயமாக செயல்படவில்லை. தொடர்ந்து தவறான முடிவுகளை அளித்து வந்தார் என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications