Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செமி பைனலுக்கு சென்றால் என்ன? இனிதான் முக்கிய சவாலே.. இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சேலஞ்ச்!

லண்டன்: இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் செமி பைனலுக்கு தேர்வாகி இருந்தாலும் கூட முக்கியமான சவால் ஒன்றை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவுடன் வெற்றி பெற்றது.

அதன்பின் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி, பாகிஸ்தான் அணியுடன் வெற்றி என்று இந்தியா வீறு நடை போட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக தடைபட்டது.

என்ன திணறல்

என்ன திணறல்

ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி மிகவும் தீவிரமாக சென்று கடைசி நேரத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. தோல்வியே அடையாமல் வரிசையாக வெற்றிகளை குவித்து வந்த இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் பவுலிங் இரண்டும் சொதப்பியது.

எப்படி

எப்படி

இந்த தொடரில் எப்படியும் நியூசிலாந்து கண்டிப்பாக செமி பைனலுக்கு தேர்வாகிவிடும். ஆனால் இங்கிலாந்து செமி பைனலுக்கு தேர்வாவது சந்தேகமான விஷயமாக இருக்கிறது. இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் இங்கிலாந்து கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இன்று இங்கிலாந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற்றால் இங்கிலாந்து மூன்றாம் இடம் பிடித்து செமி பைனலுக்கு செல்லும்.

யார்

யார்

அப்படி நடக்கும் பட்சத்தில் செமி பைனலில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத வேண்டிய நிலை ஏற்படும். இங்குதான் இந்தியாவிற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தியா செமி பைனலில் இங்கிலாந்து அணியுடன் மோதினால் வெற்றிவாய்ப்பு மிகவும் குறைவு. ஏற்கனவே இந்தியா இங்கிலாந்து அணியிடம் லீக் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் செமி பைனலில் இந்தியா மீண்டும் தோல்வி அடைந்து வெளியேற கூட வாய்ப்புள்ளது.

என்னவெல்லாம் நடக்கும்

என்னவெல்லாம் நடக்கும்

இன்று இங்கிலாந்து தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் செமி பைனல் செல்வதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் உருவாகும். இங்கிலாந்து தோல்விபெறும் பட்சத்தில், இந்தியா செமி பைனலில் 3வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 3, 2019, 17:15 [IST]
Other articles published on Jul 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+