செமி பைனலுக்கு நுழைஞ்சிட்டா போதுமே.. இந்திய மேட்சை பார்க்க யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க!
Recommended Video
லண்டன்: செமி பைனலுக்கு தேர்வானதை அடுத்து இந்திய அணிக்கு விதிக்கப்பட்டு இருந்த நிறைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணிகள் என்றால் இரண்டு அணிகளை குறிப்பிடலாம். ஒன்று ஆஸ்திரேலியா, ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து இந்த அணி மிகவும் வலிமையான அணியாக முதல் அணியாக செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது.
அடுத்த அணி என்றால் கண்டிப்பாக அது இந்திய அணிதான். இந்தியாவும் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கட்டுப்பாடு
இந்த தொடரில் இந்திய அணிக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் போட்டி முடியும் வரை குடும்பத்தினரை கொண்டு வர கூடாது என்று கூறினார்கள். அதன்பின் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. ஆனாலும் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் வெளியில் அதிக நேரம் செலவழிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இப்போது இல்லை
இந்த நிலையில் ஒவ்வொரு செமி பைனல் போட்டிக்கும் இடையில் அதிக கால இடைவெளி இருப்பதால் தற்போது இந்திய அணிக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் வெளியே செல்லவும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
யார் இப்போது
அதேபோல் இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியை காண இந்திய வீரர்களின் குடும்பத்தினருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை இன்றைய போட்டியை காண அழைத்து வந்திருந்தனர்.

யார் எல்லாம்
அதன்படி ரோஹித் சர்மா மனைவி, கோலி மனைவி அனுஸ்கா சர்மா, தோனி மனைவி சாக்சி உள்ளிட்ட எல்லோரும் வந்திருந்தனர். இதனால் பெவிலியனின் வீரர்கள் அமர்ந்திருக்க இன்னொரு பக்கம் கேலரியில் வீரர்களின் குடும்பத்தினர் அமர்ந்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications