For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு ஆஸி வைத்த செக்.. 1 வருடத்திற்கு பின் நடக்கும் மிக முக்கிய போட்டி.. ஏன் முக்கியம் தெரியுமா?

இந்தியா ஆஸ்திரேலியா இடையில் இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த லீக் தொடரின் முக்கிய ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

லண்டன்: இந்தியா ஆஸ்திரேலியா இடையில் இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த லீக் தொடரின் முக்கிய ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

இன்று உலகக் கோப்பை தொடரில் மிக மிக முக்கியமான போட்டி ஒன்று நடக்க உள்ளது. கிரிக்கெட் உலகின் எதிரெதிர் துருவங்களாக மாறி இருக்கும் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தங்களை நேருக்கு நேர் சந்தித்து கொள்கிறார்கள்.

ஆனால் சென்ற ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்கள் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட ஒருநாள் தொடர் போல சாதாரண போட்டி கிடையாது இது. இந்த போட்டி பல்வேறு விஷயங்களுக்கு பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

இந்த போட்டி முக்கியத்துவம் பெறுவதற்கு நிறைய காரணம் இருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் எப்போதும் ஆஸ்திரேலியா இந்திய அணியை விட வலுவாக இருக்கும். ஆனால் இந்தமுறை அப்படி கிடையாது. உலகிலேயே மிகவும் வலுவான கிரிக்கெட் அணியாக இந்திய கிரிக்கெட் அணி உருவெடுத்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவை விட இந்த முறை இந்திய அணி வலுவாக இருக்கிறது.

என்ன வரலாறு

என்ன வரலாறு

அதே சமயம் கொஞ்சம் வரலாற்றை திருப்பி பார்த்தால், இந்தியா மொத்தம் 136 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை ஒருநாள் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் சந்தித்துள்ளது. இதில் 77 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 49 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று இருக்கிறது.10 போட்டிகளில் எந்த விதமான முடிவும் வரவில்லை.

உலகக் கோப்பை போட்டி

உலகக் கோப்பை போட்டி

ஆனால் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இதை விட மோசமாக அடி வாங்கி உள்ளது என்றுதான் கூறவேண்டும். உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா 11 போட்டிகளில் 8 முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி உள்ளது. இதில் கடைசி உலகக் கோப்பையில் செமி பைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு சீரியஸ்

இரண்டு சீரியஸ்

இந்த வருட தொடக்கத்தில்தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரை அவர்கள் மண்ணிலேயே வென்றது. இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. அப்போது ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் அணியில் இருந்து தடை செய்யப்பட்டு நீக்கப்பட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் வென்றது

ஆனால் வென்றது

அதே சமயம் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கடைசி கட்டத்தில் வென்றதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு அணிகளும் சமமான பலத்தில் இருக்கிறது என்றே கூறலாம். ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் இல்லாமலே இந்த தொடரை ஆஸ்திரேலியா வென்றது.

இப்போது எப்படி

இப்போது எப்படி

ஆனால் இப்போது ஆஸ்திரேலியா அணி அதை விட வலுவாக இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி புதிய வீரர்களை நன்றாகவே தேர்வு செய்து புதிய அணியாக உருவெடுத்து இருக்கிறது. இவர்கள் இல்லாமல், இன்னும் ஸ்மித் மற்றும் வார்னர் வேறு மீண்டும் அணிக்கு வந்து உள்ளனர். இருவரும் தற்போது முழு பார்மில் முழு வெறியில் இருக்கிறார்கள்.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இவர்கள் இருவரையும் வைத்து ஆஸ்திரேலியா அணி கோலிக்கு செக் வைக்கலாம். முக்கியமாக ஸ்மித் கோலிக்கு மிகப்பெரிய போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல்தான் இந்திய அணியும், இந்திய அணியில் பேட்டிங் ஆர்டர் நன்றாகவே இருக்கிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மாவும், கோலியும் முக்கிய வெற்றிக்கு காரணிகளாக இருப்பார்கள்.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

தவான் மட்டுமே இந்திய அணியில் பார்ம் இல்லாமல் இருக்கிறார். அவரும் இந்த போட்டியில் சரியாக விளையாடினால், இந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் சுவாரசியமாக செல்லும்.

Story first published: Sunday, June 9, 2019, 12:17 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
ICC World Cup 2019: India vs Australia today match preview- Who is the strongest among the stronger!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+